News October 26, 2025
புதிய ரேஷன் கார்டு.. இந்த தவறை செய்யாதீர்

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் பெரும்பாலும் அண்மையில் திருமணம் செய்தவர்களே. அவர்கள் செய்யும் தவறு, முந்தைய ரேஷன் கார்டுகளில் இருக்கும் பெயரை நீக்குவதில்லை. கணவன், மனைவி இருவரும் தங்களது பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து தங்களது பெயர்களை நீக்கிய பிறகு விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், சரியான முகவரியை கொடுக்க வேண்டும். இல்லையெனில், அதிகாரிகளின் விசாரணையில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். SHARE IT
Similar News
News January 17, 2026
அண்ணாமலைக்கு புதிய பதவியா?

பாஜகவில் நயினாரும், அண்ணாமலையும் எதிரும் புதிருமாக இருந்து வந்தது டெல்லி தலைமையை அப்செட் செய்திருந்தது. இதனால், அவர்களை அழைத்து மத்தியஸ்தம் செய்திருக்கிறது டெல்லி பாஜக. இதனால் அண்ணாமலையும் சற்றே அனுசரித்து போக, அவருக்கு புதிய பதவி ஒன்றை கொடுக்க டெல்லி பாஜக திட்டமிட்டுள்ளதாம். அத்துடன் தேர்தல் களத்தில் பிரசார பீரங்கியாகவும் அண்ணாமலையை பயன்படுத்த பாஜக தரப்பில் திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
News January 17, 2026
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை: CM ஸ்டாலின்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்ட CM ஸ்டாலின், 2 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். *ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி, முதல் பரிசு பெறும் மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத்துறையில் அரசு வேலை. *அலங்காநல்லூரில் ₹2 கோடி செலவில் ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் & உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News January 17, 2026
டெல்லி செல்லும்முன் பற்ற வைத்த மாணிக்கம் தாகூர்

டெல்லி செல்வதற்கு முன் மாணிக்கம் தாகூர் போட்ட பதிவு தான், தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக். டெல்லிக்கு செல்வது எனக்காக அல்ல!, என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்காரர்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதற்காகவும், காங்., உரிமையை (ஆட்சியில் பங்கு) மீண்டும் விட்டு கொடுத்துவிடக் கூடாது என்பதை தலைவர்களிடம் வலியுறுத்தவும் டெல்லி சொல்லவிருக்கிறேன் என பதிவிட்டு புதிய நெருப்பை பற்றவைத்துள்ளார்.


