News May 24, 2024

தேர்தல் முடிவுக்கு பின் புதிய ரேஷன் அட்டை

image

தமிழகத்தில் 2 லட்சம் பேர் ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகளிர் உரிமைத் தொகை ₹1000 வழங்கும் திட்டத்தால், கடந்த ஜூலை மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால், அரசின் நலத்திட்டங்களை பெற முடியாமல் மக்கள் தவித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 10, 2026

விஜய்க்கு மீண்டும் CBI சம்மன்

image

கரூர் விவகாரம் தொடர்பான CBI விசாரணைக்கு டெல்லிக்கு பதில் சென்னையில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மார்ச் 15-ம் தேதி காலை டெல்லி தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக மீண்டும் CBI சம்மன் அனுப்பியுள்ளது. அன்றைய தேதியில் விஜய் ஆஜராவார் என நிர்மல் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

News March 10, 2026

சிலிண்டர் தட்டுப்பாடு… அவசர ஆலோசனை

image

நாடு முழுவதும் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப்சிங் புரி மற்றும் ஜெய்சங்கருடன், PM மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இதில் தட்டுப்பாட்டை தடுக்க எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளதாம்.

News March 10, 2026

விமானங்களில் நீல நிற சீட்கள்.. காரணம் தெரியுமா?

image

விமானப் பயணம் பொதுவாக பலருக்கும் பயம் தரக்கூடும். அந்த பயத்தை போக்கி பயணிகள் அமைதியாக உணர விமானங்களில் பெரும்பாலும் நீல நிற சீட்கள் பயன்படுத்தப்படுகின்றன. உளவியல் ஆய்வுகளின்படி, நீல நிறம் நம்பிக்கையும் அமைதியும் தரும் நிறமாகக் கருதப்படுகிறது. மேலும், விமானத்தின் உள்ளே வெப்பநிலை குளிராகவும் ஈரப்பதமாகவும் இருக்கும். அந்த சூழலில் நீல நிறம் பயணிகளுக்கு மனநிம்மதி மற்றும் சாந்தமான உணர்வை தர உதவுகிறது.

error: Content is protected !!