News June 27, 2024
கல்லூரி மாணவர்களுக்கு புதிய திட்டம்

₹100 கோடி மதிப்பீட்டில் திறன் தமிழ்நாடு நிறைப் பள்ளிகள் ( TN Skills-Finishing Schools) திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கல்லூரி பட்டப்படிப்பை முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்காக தொடங்கப்படும் இத்திட்டத்தில், சிறந்த தொழில் நிறுவனங்கள் மூலம் மானியத்துடன் திறன் ஓலைகள் (Skill Vouchers), பணியிடப் பயிற்சி (Internship), திறன் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News December 1, 2025
திமுகவை வீழ்த்தும் பலம் EPS-க்கு இல்லை: டிடிவி தினகரன்

விஜய் தலைமையில் அமையும் கூட்டணி திமுகவுக்கு கடும் போட்டியாக இருக்கும் என சர்வே முடிவுகள் கூறுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதேசமயம் அதிமுக 3-ம் இடத்துக்கு செல்லவே வாய்ப்புள்ளதாகவும், திமுகவை வீழ்த்தும் பலம் EPS-க்கு இல்லை எனவும் கூறியுள்ளார். அதிமுக ஒன்றுபட வேண்டும் என நினைப்பவர்களை அரவணைத்து செல்ல EPS அச்சப்படுகிறார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 1, 2025
உங்களுக்கு அபராதம் நிலுவையில் இருக்கா?

டிசம்பர் 13-ம் தேதி நடைபெறும் லோக் அதாலத்தில், நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமுறை மீறல் சலான்களுக்கு தீர்வு காணப்படும். ஆனால், ஹெல்மெட், சீட்பெல்ட், தவறான பார்க்கிங் போன்ற சிறிய விதிமுறை மீறல்களுக்கு மட்டுமே தீர்வு காணலாம். உங்களுக்கு ஏதேனும் அபராதம் நிலுவையில் உள்ளதா? இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 1, 2025
உள்ளத்தை திருடும் சான்வே மேகனா

‘குடும்பஸ்தன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை சான்வே மேகனாவின் சுருள் முடிக்கே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர், தனது லேட்டஸ்ட் ஸ்டில்ஸை இன்ஸ்டாவில் பதிவிட்டு, திருடி என குறிப்பிட்டுள்ளார். அவர், திருடுவது போல் கொடுத்த போஸ்களால், ரசிகர்களின் மனதை திருடிவிட்டார். இந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.


