News September 4, 2025
EB இணைப்பு பெயர் மாற்றத்துக்கு புதிய நடைமுறை

விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்களை கேட்பதால், வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, இனி, முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ நுகர்வோரிடம் இருந்து பெற தேவையில்லை என EB உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், விற்பனை, பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்றவற்றில் விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, ஒப்புதல் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.
Similar News
News September 4, 2025
BREAKING: இபிஎஸ் வழக்கில் தீர்ப்பு வெளியானது

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை நிராகரித்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 2022 ஜூலையில் இபிஎஸ் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து சூர்யமூர்த்தி என்பவர் தொடுத்த வழக்கை நிராகரிக்கக்கோரி, இபிஎஸ் தொடர்ந்த வழக்கை உரிமையில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு செய்த நிலையில், அவருக்கு சாதகமாக ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
News September 4, 2025
என்ன HairCut பண்ணனும் தெரியலயா? APP-ஏ சொல்லும்

உங்கள் முகத்துக்கு எந்த மாதிரியான Hairstyle எடுப்பாக இருக்கும் என தெரியவில்லையா? அந்த பிரச்னையை சரி செய்ய ஒரு செயலி இருக்கிறது. Playstore-ல் உள்ள ‘HiFace’ எனும் செயலியை டவுன்லோடு செய்து, அதில் உங்கள் செல்ஃபியை அப்லோடு செய்தால் போதும். உங்கள் முகத்திற்கு ஏற்ற Beard Style, Hairstyle, Sunglasses ஆகியவற்றை அதுவே பரிந்துரைக்கும். இந்த செயலி சொல்வதை போல நீங்கள் Try செய்து பாருங்கள். SHARE.
News September 4, 2025
செங்கோட்டையனை சமாதானம் செய்யும் பாஜக?

அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையனிடம் பேச, பாஜக தரப்பு முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. OPS, டிடிவி என அடுத்தடுத்து கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், நாளை செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திக்கிறார். இது கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதும் பாஜக, செங்கோட்டையனை சமாதானம் செய்ய தீவிரமாக முயற்சித்து வருகிறதாம்.