News September 2, 2025
திமுகவுக்கு புது சிக்கல்: காங்., எடுத்த முடிவு

திருமகன் ஈ.வெ.ரா., EVKS இளங்கோவன் என ஈரோடு கிழக்கு தொகுதி காங்., MLA-க்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில், இத்தொகுதியை DMK தன்வசப்படுத்தியது. இந்நிலையில், இத்தொகுதியை மீண்டும் காங்.,க்கே ஒதுக்க, மூத்த தலைவர் நாசே ராமச்சந்திரன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே கூடுதல் தொகுதிகளை காங்., கேட்கும் நிலையில், இது DMK-வுக்கு புதிய சிக்கலாக மாறியுள்ளது.
Similar News
News September 2, 2025
ஆசிரியர்களை அரசு கைவிடாது: அன்பில் மகேஸ் திட்டவட்டம்

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் தொடர TET தேர்வு கட்டாயம் என்று <<17579658>>உச்சநீதிமன்றம் <<>>
நேற்று தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் அரசு எக்காரணம் கொண்டும் ஆசிரியர்களை கைவிடாது என அமைச்சர் அன்பில் மகேஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் தீர்ப்பு முழுமையாக வந்தவுடன், அதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்படும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
News September 2, 2025
UPSC பாஸ் பண்ணலனாலும் அரசு வேலை; பலே திட்டம்

UPSC தேர்வு எழுதி, இறுதிக் கட்டம்வரை சென்றும் பணி வாய்ப்பை பெற முடியவில்லையா? நீங்களும் மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற பிரதிபா சேது என்ற இணையதளம் உள்ளது. இதில் உங்கள் Bio Data, கல்வி தகுதி உள்ளிட்ட தகவல்களை உள்ளிட்டு, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம் உங்கள் Profile-க்கு நிறுவனங்கள் முன்னுரிமை அளிப்பர். SHARE.
News September 2, 2025
₹500 நோட்டுகள் செல்லாது? Factcheck

செப்.30-ம் தேதியுடன் ₹500 நோட்டுகளை ATM-களில் நிறுத்தப்போவதாகவும், அதன் பிறகு ₹500 நோட்டுகள் செல்லாது எனவும் வாட்ஸ்ஆப்பில் மீண்டும் தகவல் பரவி வருகிறது. இதனை மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் (PIB FACTCHECK) மறுத்துள்ளது. ₹500 நோட்டுகள் ரத்து தொடர்பாக RBI எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும் ₹100, ₹200 நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.