News August 24, 2024

திமுகவில் அமைச்சர் மகனுக்கு புதிய பதவி

image

திமுகவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திலீப் குமாருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவில் வாரிசு அரசியல் இருப்பதாக எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக மருத்துவ அணி மாநில துணை செயலாளராக மருத்துவர் திலீப் ராஜகண்ணப்பன் நியமனம் செய்து, திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

Similar News

News March 7, 2026

BREAKING: விஜய் மனைவி அடுத்த பரபரப்பு

image

நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க கோரி, விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். லண்டனில் வசித்து வருவதால், சென்னையில் தனக்கு தனியாக வீடு இல்லை. நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க கோரினால், வழக்கறிஞர் மூலம் விஜய் தரப்பு மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ள அவர், விவாகரத்து வரை நீலாங்கரை வீட்டிலேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என விஜய்க்கு உத்தரவிட கோரியுள்ளார்.

News March 7, 2026

கமல்ஹாசனுக்கு தெலங்கானா அரசின் உயரிய விருது!

image

கமல்ஹாசனுக்கு தெலங்கானா அரசு ‘பைடி ஜெயராஜ்’ விருது அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டுக்கான Gaddar Telangana Film Awards சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. அதில், நடிகர் சிரஞ்சீவிக்கு NTR விருதும், நடிகை ரஷ்மிகாவுக்கு சிறந்த நடிகைக்கான(The Girlfriend) விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவில் கோலோச்சிய பைடி ஜெயராஜ், தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றவர்.

News March 7, 2026

FLASH: மாருதி சுசுகி கார்களின் விலை ₹45,000 வரை குறைந்தது

image

கார் வாங்க காத்திருப்போருக்கு மாருதி சுசுகி நிறுவனம் அதிரடி ஆஃபர்களை வாரி வழங்கியுள்ளது. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் முதல் ஆல்டோ கே10 வரை பிரபலமான கார்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகையானது மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைவு என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். வலப்பக்கம் SWIPE செய்து பாருங்க.

error: Content is protected !!