News April 25, 2024
டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைகிறார் புதிய வீரர்

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிவந்த ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார். இதையடுத்து அவருக்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் அணி வீரர் குல்பதின் நைப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 27 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இவர் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 13, 2025
ஐபிஎல் டிரேடிங்: டாப் -5 வீரர்களின் லிஸ்ட்

ஹர்திக் பாண்ட்யா டிரேடிங்கிற்கு அடுத்தபடியாக இம்முறை ஐபிஎல் வீரர்கள் டிரேடிங் அதிக கவனம் பெற்றுள்ளது. கடந்த சீசனில் சொதப்பிய அணிகள், தங்களை வலுப்படுத்திக் கொள்ள வீரர்களை டிரேட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில், அதிக தொகைக்கு டிரேட் செய்யப்பட்ட வீரர்களின் விவரங்களை போட்டோக்களாக கொடுத்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.
News November 13, 2025
முடி வளர்ச்சிக்கு அற்புதமான எண்ணெய் இதுதான்

கடுகு எண்ணெயில் உள்ள வைட்டமின் இ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் முடி வளர்ச்சிக்கு உதவும் என்கின்றனர். அத்துடன், மாசு, UV Rays-ஆல் ஏற்படும் சேதங்களிலிருந்து முடியை இது காக்கிறது. இதனால் காஸ்ட்லியான சீரம்களை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த எண்ணெய்யில் பூஞ்சை எதிர்ப்பு சக்தியும் இருப்பதால் பொடுகு தொல்லையும் பறந்து போகும். வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெய்யை தேய்த்து, தலைக்கு குளியுங்கள். SHARE.
News November 13, 2025
கூட்டணி அறிவிப்பு தற்போது இல்லை: பிரேமலதா

சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், ஜன.9-ம் தேதிக்கு முன்பாகவோ, அல்லது அதன்பின்னரோ கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் என பிரேமலதா தெரிவித்துள்ளார். சூழ்நிலையை பொறுத்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ள அவர், தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றிபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


