News March 31, 2025

உப்பு தண்ணீரில் கரையும் புதிய பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு

image

ஜப்பானின் RIKEN CEMSஐ சேர்ந்த விஞ்ஞானிகள், உப்புத் தண்ணீரில் கரைத்தால் கரைந்து விடும் தன்மை கொண்ட புதிய பிளாஸ்டிக்கை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். தற்போது இருப்பது போலவே வலுவான பிளாஸ்டிக்காகவே இதுவும் உள்ளது. ஆனால் உப்பு தண்ணீரில் அதை போட்டதும் இருந்த இடம் தெரியாமல் கரைந்து விடுகிறது. இதனால் இயற்கை சூழலுக்கு இந்த புதிய பிளாஸ்டிக்கால் எந்த பாதிப்பும் இருக்காது.

Similar News

News April 1, 2025

பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்கு

image

இன்றைய IPL போட்டியில், பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது லக்னோ அணி. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணியின் துவக்க வீரர் மார்ஷ் 0 ரன்களிலும் கேப்டன் பண்ட் 2 ரன்களிலும் வெளியேறினர். இறுதியாக, அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.

News April 1, 2025

பழம்பெரும் நடிகை காலமானார்

image

ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகை சியான் பார்பரா ஆலன் (78), உடல்நலக் குறைவால் காலமானார். அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் உயிரிழந்தார். The Waltons தொடர் மூலம் புகழ்பெற்ற இவர் நடித்த படங்களுள் Billy Two Hats, Love American Style, Scream, Pretty Peggy, The Lindbergh Kidnapping Case உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. நடிப்புக்காக கோல்டன் குளோப் விருதுக்கும் இவர் பரிந்துரைக்கப்பட்டார்.

News April 1, 2025

HAPPY NEWS: மரணம் முடிவல்ல, மீண்டும் உயிர் பெறலாம்

image

இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்கிறார் அமெரிக்க விஞ்ஞானி சாம் பார்னியா. ஒருவர் மரணமடைந்த பின்னும் பல மணி நேரத்துக்கு, ஏன் சில நாள்களுக்கு கூட மூளை மீண்டும் உயிர்ப்பிக்கக் கூடிய நிலையில் இருக்கும். அதேபோல உடல் செல்களும் கூட சில நாள்கள் வரை அழிவதில்லை. அதனால், ECMO இயந்திரங்கள், சில குறிப்பிட்ட மருந்துகள் மூலம் மூளையை மீண்டும் உயிர் பெறச் செய்யலாம் என்கிறார் பார்னியா. இது வரமா? சாபமா?

error: Content is protected !!