News February 26, 2025

அனைவருக்கும் பென்ஷன்: விரைவில் புதிய திட்டம்

image

நாட்டில் உள்ள அனைவருக்கும் பலனளிக்கும் வகையில், புதிய பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. ‘யுனிவர்சல் பென்ஷன் திட்டம்’ ஒன்றை உருவாக்கி, தற்போது நடைமுறையில் இருக்கும் தேசிய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட அனைத்து பென்ஷன் திட்டங்களையும் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளது. 18 வயது நிரம்பிய யாரும் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். ஆனால், அரசு பங்களிப்பு எதுவும் இருக்காது எனத் தெரிகிறது.

Similar News

News March 24, 2026

மக்களை காக்க PM முதலில் தயாரா? CM ஸ்டாலின்

image

மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து மக்களை காக்க பல முறை வலியுறுத்தியும் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என CM ஸ்டாலின் கூறியுள்ளார். மக்கள் தயாராக இருக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் PM மோடி பேசியதை விமர்சித்த அவர், மக்களை காக்க நீங்கள் முதலில் தயாரா என கேட்டுள்ளார். மேலும், தயாராக இருக்க வேண்டியது மத்திய அரசா? நாட்டு மக்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 24, 2026

ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள்.. முதலீட்டாளர்கள் நிம்மதி!

image

பெரிய சரிவுக்கு பிறகு பங்குச்சந்தைகள் இன்று சற்று மீண்டுள்ளது. சென்செக்ஸ் 844 புள்ளிகள் உயர்ந்து 73,525 புள்ளிகளிலும், நிஃப்டி 262 புள்ளிகள் உயர்ந்து 22,775 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள் சுமார் ₹15 லட்சம் கோடியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

News March 24, 2026

அமமுக களமிறங்க திட்டமிட்டுள்ள 11 தொகுதிகள்!

image

அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிட உள்ள 11 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், சென்னையில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது. அதேபோல், சோளிங்கர், மதுரை சென்ட்ரல், மன்னார்குடி, பூந்தமல்லி, நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், தஞ்சை, காரைக்குடி, பெரியகுளம், திருச்சி மேற்கு தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன. இத்தேர்தலில் TTV தினகரன் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!