News March 15, 2025
பருத்தி உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்

* பருத்தி உற்பத்தியை அதிகரிக்க ₹12 கோடியில் பருத்தி சாகுபடி திட்டம் * 1 லட்சம் ஏக்கரில் ₹12 கோடியில் மாற்றுப்பயிர் சாகுபடி திட்டம் * ₹15 கோடியில் 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் * ₹146 கோடி செலவில் இந்த ஆண்டும் ‘முதலமைச்சரின் மன்னுயிர் காப்போம் திட்டம்’ * ₹269 கோடியில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டம் 2,335 ஊராட்சியில் செயல்படுத்தப்படும் என, அமைச்சர் அறிவித்துள்ளார்.
Similar News
News March 17, 2025
காலமானார் முன்னாள் மத்திய அமைச்சர்

முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையுமான தேபேந்திர பிரதான் மரணம் அடைந்துள்ளார். 84 வயதான அவர் டெல்லியில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். MBBS படித்த தேபேந்திர பிரதான், தனது பாதையை அரசியல் பக்கம் திருப்பினார். 1998 – 2001 காலகட்டத்தில் வாஜ்பாய் அரசில் மத்திய சாலை போக்குவரத்து, வேளாண்துறை இணையமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார்.
News March 17, 2025
அதிமுகவில் பிளவா? இபிஎஸ் பதில்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ்சிடம் அதிமுகவில் பிளவு ஏற்படப் போவதாக வெளியாகும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதிமுகவில் பிளவு எதுவும் இல்லை என்று கூறினார். தாம் முதல்வரானது முதல் அதிமுகவை உடைக்க முயற்சி நடந்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும், அதிமுகவை உடைக்க நினைப்பவர்கள்தான் உடைந்து போவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
News March 17, 2025
வந்தே பாரத் ரயில் வேகம் குறைய என்ன காரணம்?

நவீனமடைந்து வரும் இந்திய ரயில்வே, அதிவேக சேவையை வழங்க வந்தே பாரத் ரயிலை அறிமுகம் செய்தது. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. ஆனால், அதன் வேகம் குறைக்கப்பட்டதால் பார்லிமென்டில் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் மீது எந்த குறையும் இல்லை; தண்டவாள உள்கட்டமைப்புகள் தான் அப்டேட் செய்ய வேண்டியிருக்கிறது என்றார்.