News March 30, 2024
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியுடன் ஏர்டெல்லில் புதிய திட்டம்

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியுடன் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஏர்டெல் டிஸ்னி ஹாட்ஸ்டார், எக்ஸ்ட்ரீம் ஓடிடிகளுடன் திட்டங்களை அளித்தது. இந்நிலையில் ரூ.1,499 ரிசார்ஜூக்கு, 84 நாள்கள் வேலிடிட்டியுடன் நாள்தோறும் 3 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புடன் புதிய திட்டத்தை ஏர்டெல் கொண்டு வந்துள்ளது. ஜியோவில் ஏற்கெனவே இதேபோன்ற திட்டம் உள்ளது.
Similar News
News January 19, 2026
சிறுவன் கைகளில் மும்பை மேயர் பதவி!

தேர்தல் முடிந்தாலும், மும்பை மேயர் யார் என்பது சஸ்பென்ஸாக இருக்க காரணம் அங்குள்ள குலுக்கல் முறை! மும்பை மேயர் பதவி 2.5 ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இடஒதுக்கீடு (பெண்/SC/ST/OBC/பொது) செய்யப்படும். சீட்டு எழுதி குலுக்கி போட்டு, மாநகராட்சி பள்ளி சிறுவன் ஒருவன் எடுப்பான். அதில் வரும் பிரிவை சேர்ந்த வேட்பாளர்களில் இருந்து மேயர் தேர்வு செய்யப்படுவார். அடுத்தவாரம் இந்த தேர்வு நடைபெறவுள்ளது.
News January 19, 2026
BREAKING: செங்கோட்டையன் முடிவை மாற்றினார்

திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக Ex அமைச்சர்கள் இருவரை தவெகவில் இணைக்க செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால், அவர்கள் பிடி கொடுக்காததால், தனது கவனத்தை தற்போது திருப்பூரை சேர்ந்த ஒரு Ex அமைச்சரின் பக்கம் திருப்பியுள்ளார். குறிப்பாக, வரும் தேர்தலில் சீட்டு மறுக்கப்பட்டதால் அந்த Ex அமைச்சர், EPS மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News January 19, 2026
அதிமுகவில் மீண்டும் OPS? செல்லூர் ராஜு கொடுத்த அப்டேட்

தொகுதி மாறப்போவதாக வரும் தகவல் வதந்தி எனக் கூறிய செல்லூர் ராஜு, மதுரை மேற்கு தொகுதியிலேயே போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அவர், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க பாஜக முயற்சி எடுப்பதாகவும், அதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், OPS, TTV இணைப்பை பற்றி EPS தான் முடிவெடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.


