News March 21, 2024
டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் புதிய மனு

டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். மதுபான கொள்கை மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய 9 சம்மன்களை எதிர்த்து, ஏற்கனவே அவர் தாக்கல் செய்த மனு குறித்து பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாதென உத்தரவிடக்கோரி அவர் தாக்கல் செய்த புதிய மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
Similar News
News January 20, 2026
₹18,000 சம்பளம்.. 22,000 வேலைவாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 குரூப் டி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. சம்பளம்: ₹18,000 முதல். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2026, ஜன.21 முதல் பிப்.20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். SHARE IT.
News January 20, 2026
குடும்ப அட்டைகளுக்கு ₹3,000.. தமிழக அரசு அறிவித்தது

விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்றும் ₹3,000 ரொக்கம் அடங்கிய இத்தொகுப்பு விடுபட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. 97% குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3% பேருக்கும் முறையாக வழங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
News January 20, 2026
கூட்டணி ஆட்சி கிடையாது: தம்பிதுரை திட்டவட்டம்

தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி கிடையாது என்று கூறியுள்ள அதிமுக MP தம்பிதுரை, 2026-லும் கூட்டணி ஆட்சி இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஓசூரில் பேசிய அவர், EPS தலைமையில் அதிமுக தனித்து தான் ஆட்சியை அமைக்கும் என்று கூறியுள்ளார். தேர்தலில் மட்டும் தான் கூட்டணி; ஆட்சியில் கூட்டணி கிடையாது என்று கூறிய அவர், கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


