News October 30, 2025
அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி

வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் கே.கே. செல்வகுமார், அதிமுகவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இருதரப்பும் சீட் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்யும் வகையில், செல்வகுமார் எஸ்.பி.வேலுமணியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது, சீட் குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
Similar News
News October 30, 2025
திமுக கூட்டணி வெலவெலத்து போகும்: தமிழிசை

தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி வெலவெலத்து போகும் என தமிழிசை தெரிவித்துள்ளார். திமுகவை தோற்கடிக்க நினைப்பவர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து வாக்குகள் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அது விஜய், சீமான், OPS, TTV ஆகியோரின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார். வருங்காலங்களில் NDA கூட்டணி பலப்படும் என்று குறிப்பிட்ட அவர், திமுக கூட்டணி அப்படியே தொடராது என பேசியுள்ளார்.
News October 30, 2025
வெளுக்கும் ஆஸ்திரேலியா… தடுமாறும் இந்தியா

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில், ஆஸ்திரேலியா அதிரடியாக ஆடி வருகிறது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீராங்கனை லிட்ச்ஃபீல்ட் 66 பந்துகளில் 83 ரன்கள் விளாசியுள்ளார். 62 ரன்களுக்கு ஆட்டமிழக்க வேண்டிய அவர், நூலிழையில் தப்பினார். முன்னதாக கிராந்தி கவுட் பந்துவீச்சில் கேப்டன் அலிசா ஹீலி 5 ரன்னுக்கு அவுட்டாகினார்.
News October 30, 2025
‘டாக்ஸிக்’ ரிலீஸ்.. வதந்திகளுக்கு படக்குழு முற்றுப்புள்ளி

யஷ்-ன் ‘டாக்ஸிக்’ ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் பல காட்சிகள் திருப்தியளிக்கவில்லை என இயக்குநர் கீது மோகன்தாஸிடம் யஷ் கூறியதாகவும், அதனால் ரீ-ஷூட்டிங் நடப்பதாகவும் தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள தயாரிப்பு நிறுவனம் இன்னும் 140 நாள்களில், அதாவது திட்டமிட்டபடி 2026 மார்ச் 19-ம் தேதி ‘டாக்ஸிக்’ வெளியாகும் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளது.


