News April 5, 2025
பாம்பன் புதிய பாலம் ரெடி.. நாளை திறக்கிறார் மோடி

பாம்பனில் ரூ.550 கோடியில் கட்டப்பட்ட புதிய ரயில்வே பாலத்தை மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். 1914இல் அங்கு கட்டப்பட்ட பாலத்திற்கு பதிலாக கடலில் 2.07 கி.மீ. தூரம் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் மைய பகுதியில் கடலில் கப்பல்கள் செல்ல அனுமதிக்கும் வகையில் தூக்கு பாலம் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முந்தைய பாலத்தை விட இது 3 மீட்டர் உயரமானது. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் மூலம் கட்டுமானம் நடந்துள்ளது.
Similar News
News April 6, 2025
CPIM பொதுச்செயலாளராகும் MA.பேபி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6ஆவது தேசிய பொதுச்செயலாளராக கேரளாவை சேர்ந்த எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிபிஎம்(CPIM) மூத்த தலைவர்களில் ஒருவரான இவரது பெயரை பிரகாஷ் காரத் பரிந்துரை செய்துள்ளார். மதுரையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
News April 6, 2025
அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜாகுவார்!

ஆடம்பர பிரியர்களான அமெரிக்கர்களுக்கு ஆடம்பர கார் நிறுவனமான ஜாகுவார் அதிர்ச்சியைக் கொடுத்து இருக்கிறது. அதற்கு காரணம் அதிபர் டிரம்ப். வாகன உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு 25% வரியை அவர் விதித்ததால், அமெரிக்காவுக்கு தனது கார்களை ஏற்றுமதி செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளது. இத்தனைக்கும் கடந்த ஆண்டில் கால் பங்கு கார்களை அமெரிக்காவில் தான் ஜாகுவார் விற்பனை செய்திருந்தது.
News April 6, 2025
இளம் பெண்ணுக்கு எமனாக மாறிய ரோலர் கோஸ்டர்

டெல்லியில் கேளிக்கை பூங்காவின் ரோலர் கோஸ்டரில் இருந்து இளம்பெண் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கபாஷேரா பகுதியில் உள்ள கேளிக்கை பூங்காவில் உள்ள ரோலர் கோஸ்டரில் பிரியங்கா (24) என்பவர் சவாரி செய்தபோது இந்த சோகம் அரங்கேறியுள்ளது. சமீபத்தில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்பாராத விபத்தில் மரணமடைந்துள்ளார். சாவு ஒருவருக்கு எப்படி வருமென யாருக்கு தெரியும்.