News February 11, 2025
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு புது ஓனர்?

குஜராத் டைட்டன்ஸ் அணியின் 67% பங்குகளை டோரண்ட் குழுமம் வாங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு லக்சம்பர்க்கைச் சேர்ந்த CVC கேப்பிடல், குஜராத் அணியை வாங்கியது. அந்த அணி IPLல் அறிமுகமான 2022 சீசனிலேயே கோப்பையை வென்றது. 2023 சீசனில் இறுதிப் போட்டி வரை சென்று ரன்னர் அப் ஆனது. அந்த அணியின் கேப்டனாக தற்போது ஷுப்மன் கில் செயல்பட்டு வருகிறார்.
Similar News
News March 16, 2026
பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு ஏப்.1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது. விடுமுறையை ஈடுசெய்ய ஒரு குறிப்பிட்ட நாளில் வேலை நாளாக செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கும் விரைவில் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. SHARE IT
News March 16, 2026
ரஜினியிடம் ஆதவ் மன்னிப்பு கேட்கணும்: நயினார்

திமுக மிரட்டியதாலேயே ரஜினி அரசியலுக்கு வரவில்லை எனக் கூறிய ஆதவ் அர்ஜுனாவிற்கு, நயினார் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறந்த பண்பாளரான ரஜினி குறித்து ஆதவ் பொதுவெளியில் தவறாகப் பேசியது ஏற்புடையதல்ல என்று X தளத்தில் நயினார் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், ரஜினி & அவரது ரசிகர்களிடம் ஆதவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
News March 16, 2026
WOW.. 189 வருடங்களுக்கு பின் கண்டறியப்பட்ட செடி

அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் 189 ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் அரிதான மூலிகை செடி ஒன்று மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. Henckelia monophylla என்ற இச்செடியை சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக யாரும் பார்க்கவில்லை. தற்போது, இது லோஹித் மாவட்டத்தில் தென்பட்டுள்ளதால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், இது மாநிலத்தின் பல்லுயிர் செழுமைக்கு எடுத்துக்காட்டு என அம்மாநில CM தெரிவித்துள்ளார்.


