News October 21, 2025
பாகிஸ்தான் அணிக்கு புதிய ODI கேப்டன்

பாகிஸ்தான் அணியின் ODI கேப்டன் பதவியில் இருந்து முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷயின் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். தெ.அப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் அவர் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஸ்வான் தலைமையில் தொடர் தோல்விகளை பாகிஸ்தான் சந்தித்ததால் இந்த திடீர் மாற்றம் நடைபெற்றுள்ளது.
Similar News
News March 11, 2026
IPL-ல் ஆரம்பமே அமர்க்களமா இருக்கும் போலயே!

IPL போட்டிகள் மார்ச் 28-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்தியா முழுவதும் IPL Fever தொடங்கிவிட்டது. இந்நிலையில் ரசிகர்களை மேலும் ஹைப் ஏற்றும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது IPL முதல் போட்டியிலேயே RCB-ம் CSK-ம் மோதவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை(மார்ச் 12) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 11, 2026
பச்சைத் துரோகம் செய்த இபிஎஸ்: ஐ.பெரியசாமி

மோடி அரசின் செயல்பாடு 100 நாள் வேலை திட்டத்தையே முற்றிலும் ஒழித்துக்கட்டும் முடிவில் இருப்பதையே காட்டுவதாக ஐ.பெரியசாமி விமர்சித்துள்ளார். கிராமப்புற மக்களின் வயிற்றில் அடிக்கும் புதிய சட்டத்தை ஆதரித்து EPS பச்சைத் துரோகம் செய்துவிட்டார் என சாடிய அவர், கிராமபுறத்தின் முதுகெலும்பை முறிக்கும் மோடி அரசின் வஞ்சகத்துக்கு துணைபோன EPS-க்கு மக்கள் வரும் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்தார்.
News March 11, 2026
பங்குச்சந்தைகள் மளமளவென சரிந்தது.. ₹8 லட்சம் கோடி LOSS!

LPG தட்டுப்பாடு விவகாரம் பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது. சென்செக்ஸ் 1,080 புள்ளிகள் சரிந்து 77,100 ஆகவும், நிஃப்டி 254 புள்ளிகள் சரிந்து 24,007 ஆகவும் மளமளவென குறைந்துள்ளது. இதனால், இன்று சுமார் ₹8 லட்சம் கோடிகளை முதலீட்டாளர்கள் இழந்துள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், IOC, BPC, HPC உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் 2% வரை அதிகரித்துள்ளது.


