News August 3, 2024
புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி விரைவில் திறப்பு

பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள பிசிசிஐ-யின் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி (NCA) விரைவில் திறக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். கிரிக்கெட் மைதானங்கள் மற்றும் பயிற்சி ஆடுகளங்களின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். புதிய NCA-வில் உலகத்தரம் வாய்ந்த 3 மைதானங்கள், 45 பயிற்சி ஆடுகளங்கள், உட்புற ஆடுகளங்கள் என பல்வேறு அதி நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.
Similar News
News November 20, 2025
புதிய ஓய்வூதிய திட்டமே சிறப்பாக உள்ளது: TN அரசு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிய பொது நல மனு மீதான விசாரணையில், புதிய ஓய்வூதிய திட்டமே சிறப்பாக செயல்படுவதாக தமிழக அரசு மதுரை HC-ல் பதிலளித்துள்ளது. ஏற்கெனவே, பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்திருந்தது. இதனிடையே, டிசம்பருக்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஜாக்டோ ஜியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 20, 2025
பிரபல நடிகை பிரதியுஷா மரணம்.. பரபரப்பு தகவல்

தவசி, மனுநீதி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பிரதியுஷாவின் மரணம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. காதலன் சித்தார்த் உடன் 2002-ல் விஷம் குடித்து அவர் உயிரிழந்தார். ஆனால், காதலன் உயிர்பிழைத்தார். இதுதொடர்பான SC வழக்கில், தான் குற்றமற்றவர் என சித்தார்த் வாதிட்டார். ஆனால், தனது மகளை தற்கொலைக்கு தூண்டியதே அவர்தான் என பிரதியுஷாவின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.
News November 20, 2025
கூட்டணி ரூட்டை மாற்றுகிறாரா விஜய்?

கொள்கை எதிரி பாஜக உடன் கூட்டணி கிடையாது என கூறிவந்த விஜய், தற்போது NDA கூட்டணியில் இணைவது பற்றி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. பிஹார் தேர்தலில் PK-வின் கட்சி மரண அடி வாங்கியதால், நாமும் தனித்து போட்டியிட்டால் படுதோல்வி அடைவோமோ என விஜய் யோசிக்கிறாராம். ஒருவேளை அதிமுக கூட்டணியில் இணைந்து 50 தொகுதிகளில் போட்டியிட்டால் 40 தொகுதிகளில் நிச்சயம் தவெக வெற்றி பெறும் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.


