News October 23, 2024
டிசம்பரில் பாஜகவுக்கு புதிய தலைவர்?

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் முடிந்த பின்பு பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தலைவராக உள்ள ஜெ.பி. நட்டா அமைச்சரான நிலையில், டிசம்பர் 2ஆவது வாரத்திற்குள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. தென் மாநிலத்தை சேர்ந்தவரை தலைவராக்க பாஜக மூத்த தலைவர்கள் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 16, 2026
பொங்கல் பரிசு: தங்கம் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) $25(இந்திய மதிப்பில் ₹2,260) குறைந்து $4,600-க்கு விற்பனையாகிறது. கடந்த 30 நாள்களில் சுமார் $300 அதிகரித்த தங்கம் இன்று சரிவைக் கண்டுள்ளது. தை பிறந்துள்ளதால், சுப முகூர்த்த விழாவுக்காக நகைகள் வாங்க காத்திருந்தவர்களுக்கு இது சற்று நிம்மதியை அளித்துள்ளது. இந்திய சந்தையில் இன்று கணிசமான அளவு தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது.
News January 16, 2026
ELECTION: ராமதாஸ் முன் உள்ள 3 வாய்ப்புகள் இதுதான்!

NDA கூட்டணியில் அன்புமணி சேர்ந்துவிட்டதால், ராமதாஸுக்கு இன்னும் 3 வாய்ப்புகளே உள்ளன. 1.திமுக அல்லது தவெக கூட்டணியில் சேர்ந்து அன்புமணி தரப்புக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்குவது. 2. தனித்து களம் காண்பது. 3.அன்புமணியை சமாதானப்படுத்தி அதிமுக அணியில் ஒற்றை இலக்க தொகுதிகளை பெறுவது. வரும் தேர்தலில் எந்த அணி அதிக MLA-க்களை வெல்லுமோ, அந்த அணியே பாமகவை கைப்பற்றும் என கூறப்படுகிறது.
News January 16, 2026
மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்

உழவுத் தொழிலில் விவசாயிகளுக்கு துணைநிற்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில், காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் 2.30 மணிக்குள்ளும் பொங்கல் வைக்கலாம். மேலும், அந்த பொங்கலை மாட்டிற்கு கொடுத்து வழிபாடு செய்வது சிறப்பு. வீட்டில் மாடுகள் இல்லாதவர்கள் சிவன் கோவிலுக்கு சென்று நந்தி பகவானை வழிபடலாம்.


