News August 20, 2025

CM, அமைச்சர்களின் பதவி பறிப்பு.. வருகிறது புதிய சட்டம்

image

CM, அமைச்சர்கள் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தாலே ‘பதவி நீக்கம்’ செய்யும் புதிய சட்டத்தை லோக் சபாவில் அமித்ஷா இன்று அறிமுகம் செய்கிறார். முறைகேடு புகார்களில் செந்தில் பாலாஜி, கெஜ்ரிவால், சோரன் உள்ளிட்டோர் ED-யால் கைதாகி சிறைக்கு சென்றனர். ஆனால், அவர்களின் பதவி பறிக்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதித்தால் மட்டுமே பதவி பறிக்கப்படும். இந்நிலையில், இந்த புதிய சட்டம் அறிமுகமாகிறது.

Similar News

News August 20, 2025

2.44 CM தான்! உலகின் விலையுயர்ந்த விநாயகர் சிலை!

image

பார்ப்பதற்கு சின்னதாக, வெள்ளை கட்டி போல காட்சி தரும் இந்த விநாயகர் சிலையின் விலை சுமார் ₹500 கோடி. குஜராத்தின் சூரத் நகரை சேர்ந்த ராஜேஷ் பாய் என்ற தொழிலதிபர் 2005-ல் இந்த 2.44 சென்டி மீட்டர் அளவிலான Uncut Diamond-ஐ காங்கோ நாட்டிலிருந்து வாங்கியுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய இந்த வைரக்கல்லை அவரின் குடும்பத்தினர் விநாயகர் சிலையாக செதுக்கி வைத்து அனுதினமும் வழிப்பட்டு வருகின்றனர்.

News August 20, 2025

டெல்லி CM கன்னத்தில் அறைந்தவர் இவர்தான் (PHOTO)

image

டெல்லி CM மீது தாக்குதல் நடத்தியது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் மக்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, CM ரேகா குப்தாவுக்கும், ராஜ்கோட்டைச் சேர்ந்த ராஜேஷ் பாய் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜேஷ், ரேகா குப்தாவின் கன்னத்தில் அறைந்து, அவரது தலைமுடியை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். தற்போது, அவரின் PHOTO வெளியாகியுள்ளது.

News August 20, 2025

நாகர்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர்

image

சமீப காலங்களில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் இயக்குநர்கள் மொழிகளைக் கடந்து நல்ல திரைப்படங்களை இயக்கி வருகின்றனர். அந்த வகையில், நாகர்ஜுனாவின் 100-வது படத்தை இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கவுள்ளார். இவர் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் இயக்குநர் ஆவார். முன்னதாக தமிழ் இயக்குநர்களின் இயக்கத்தில் ரட்சகன், பயணம் ஆகிய படங்களிலும் நாகர்ஜுனா நடித்துள்ளார். இறுதியாக கூலி படத்திலும் அவர் மிரட்டியிருந்தார்.

error: Content is protected !!