News August 9, 2024

11 ஆம் தேதி பொறுப்பேற்கும் புதிய சரக டிஐஜி

image

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசியை உள்ளடக்கிய திருநெல்வேலி சரக டிஐஜியாக தற்போதைய நெல்லை மாநகர காவல் ஆணையாளர் டாக்டர் மூர்த்தி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார். அவர் வருகின்ற 11ஆம் தேதி பதவியேற்கிறார். திருநெல்வேலி புதிய காவல் ஆணையாளராக ரூபேஷ் குமார் மீனாவும் வருகின்ற 11ஆம் தேதி பொறுப்பேற்கிறார்.

Similar News

News September 11, 2025

கூடங்குளம் அருகே கோவில் சிலை உடைப்பு: இருவர் கைது

image

கூடங்குளம் அருகே வைராவி கிணறு கிராமத்தில் பிரபல பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று இரவு மின்தடை ஏற்பட்ட போது, ​​கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் செயலிழந்த நிலையில், கோவில் சிலை உடைக்கப்பட்டது. சிலையை உடைத்ததாக தவசிகுமார் மற்றும் சுயம்புலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்களிடம் காவல் ஆய்வாளர் ரெகுராஜன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் நெஜில்சன் விசாரிக்கின்றனர்.

News September 11, 2025

நெல்லை: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள் இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரையில் நடைபெறுகிறது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News September 11, 2025

தற்கொலைக்கு கவுன்சிலிங் அவசியம் – நெல்லை எஸ்பி

image

நெல்லை அரசு மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பேரணியை துவக்கி வைத்தார். டீன் டாக்டர் ரேவதி பாலன் தலைமையில் நடந்த கருத்தரங்கில், தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு கவுன்சலிங் அவசியம் என எஸ்பி பேசினார். மருத்துவமனையில் இலவச ஆலோசனை மையம் உள்ளதாக டாக்டர் ரேவதி தெரிவித்தார். மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

error: Content is protected !!