News January 20, 2025

பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி

image

வடமாநிலத்தவர் அதிகளவில் புலம்பெயர்ந்து வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது. வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து, தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் முயற்சிகளை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு சேர்ந்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை, பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளிக்க வேண்டும் எனவும் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News March 5, 2026

கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

image

போரில் கொல்லப்பட்ட கமேனியின் இறுதிச்சடங்கு நேற்று மாலை மஷாத் நகரில் உள்ள ரேசா புனித தளத்தில் நடைபெறும் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், டெஹ்ரான் உள்ளிட்ட ஈரானின் முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல், வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிச்சடங்கின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஈரான் அரசு கூறியுள்ளது.

News March 5, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 628 ▶குறள்:
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
▶பொருள்: இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.

News March 5, 2026

ஆதிக்க வெறியின் ஆணவம் அழிப்பு: CM ஸ்டாலின்

image

திருச்சியில் தமிழில் <<19294297>>‘கர்தவ்ய த்வார்<<>>’ என எழுதப்பட்டதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் அது நீக்கப்பட்டது. இந்நிலையில், திருச்சியில் அகற்றப்பட்டது ஹிந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும் தான் என CM ஸ்டாலின் தனது X பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், போலி தமிழ்ப்பற்று காட்டுபவர்களையும், அவர்களுக்கு துணைநின்று TN-ற்கு துரோகம் இழைப்போரையும் மக்கள் அகற்றுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!