News March 27, 2025

ரூட்டை மாற்றும் தவெக.. வெளியான புதிய தகவல்

image

அதிமுக – பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான நிலையில், இனி அதிமுகவையும் விமர்சிக்க தவெக தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தொடங்கியது முதலே திமுக, பாஜகவை கடுமையாகச் சாடி வந்த விஜய், அதிமுக விவகாரத்தில் சற்று மென்மையான போக்கையே கையாண்டு வந்தார். அது, ஒருவேளை கூட்டணிக்காக இருக்கலாம் எனப் பேசப்பட்டது. ஆனால், இனி 2026 தேர்தலுக்கான களத்தில் அவர்களையும் அடித்து விளையாட விஜய் ரெடியாகி வருகிறாராம்.

Similar News

News March 30, 2025

ஓரங்கட்டப்படும் திமுக மூத்த தலைவர்கள்?

image

2021 தேர்தலில் திமுக வேட்பாளர் பட்டியலில் மூத்த தலைவர்கள், இளம்தலைமுறையினர் என சமமாக வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த பார்முலாவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதேபோன்ற பார்முலாவை 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் பின்பற்ற திமுக முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட பல மூத்த தலைவர்களுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படாது என்றும் சொல்லப்படுகிறது.

News March 30, 2025

களமிறங்கிய கே.எல்.ராகுல்.. ஆட்டம் களைகட்ட போகுது…

image

கே.எல். ராகுலுக்கு பெண் குழந்தை பிறந்ததால் கடந்த போட்டியில் பங்கேற்கவில்லை. தற்போது அணியில் இணைந்துள்ள அவர் இன்றைய போட்டியில் பங்கேற்கிறார். கடந்த போட்டியில் விளையாடிய சமீர் ரிஷ்விக்கு பதில் ராகுல் விளையாட உள்ளார். SRH-ஐ பொறுத்தவரை சிமர்ஜீத் சிங்க்கு பதில் ஜீஷான் அன்சாரி இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.

News March 30, 2025

66 வயதில் 10வது குழந்தை பெற்ற பெண்

image

ஜெர்மனியில் 66 வயது பெண், 10ஆவது குழந்தை பெற்றுள்ளார். பெர்லினைச் சேர்ந்த அலெக்சாண்ட்ராக்கு, அறுவை சிகிச்சையின்றி ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் உடல் எடை ஏழேகால் பவுண்ட். அக்குழந்தைக்கு பிலிப் என அவர் பெயரிட்டுள்ளார். அலெக்சாண்ட்ராக்கு 1970இல் முதல் குழந்தையும், பிறகு 8 குழந்தைகளும் பிறந்தன. உகாண்டாவில் 70 வயது பெண்ணுக்கு அண்மையில் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!