News August 8, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலையில் புதுத் தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டதில் புதுத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் எம்பி சீட் கேட்டு காங்கிரஸில் அஸ்வத்தாமன் முயற்சித்த நிலையில், அவரை ரூ.10 கோடி கேட்டு தொழிலதிபரை மிரட்டியதாக போலீசார் கைது செய்தனர். இதனால் வாய்ப்பு பறிபோனது. இதற்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என கருதி ரவுடிகளுடன் சேர்ந்து கொலைக்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News November 16, 2025
சீனா – ஜப்பான் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு!

தைவானை தாக்க சீனா முயன்றால் ஜப்பான் ராணுவ ரீதியாக பதிலளிக்கும் என்று, அந்நாட்டு பிரதமர் சனே டகாயிச்சி கூறினார். இதற்கு சீன தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, சீன மக்கள் ஜப்பானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில், இருநாடுகளும் உரிமை கோரும் சென்காகு தீவுக்கு கடலோர காவல் படையை சீனா ரோந்துக்கு அனுப்பியுள்ளது. இது இருநாடுகள் இடையேயான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
News November 16, 2025
பள்ளிகளுக்கு 12 நாள்கள் விடுமுறை.. அறிவித்தது அரசு

பள்ளிகளுக்கு 12 நாள்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. <<18304103>>டிச.10 முதல் 23-ம் தேதி வரை<<>> தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதனையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை மாணவர்களுக்கு லீவுதான். இதில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள் அடங்கும். மொத்தமாக 12 நாள்கள் விடுமுறை கிடைப்பதால் அதனை கொண்டாட முன்கூட்டியே திட்டமிடுங்கள். வெளியூர் செல்ல அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. SHARE IT.
News November 16, 2025
ஆதார் கார்டை எங்கெல்லாம் பயன்படுத்த கூடாது?

*குடியுரிமை, இருப்பிடம் & பிறந்த தேதிக்கான சான்றாக பயன்படுத்தக் கூடாது.
*Facebook, Instagram, X உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் உள்ளிட வேண்டாம்.
*யாருடனும் ஆதார் OTP, m-Aadhaar PIN ஆகியவற்றை ஷேர் செய்யக் கூடாது.
*ஆதார் கார்டை பொதுவெளியில் வைக்க வேண்டாம்.
*பள்ளியில் அட்மிஷனின் போது ஆதார் எண் அவசியமில்லை. வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1947 என்ற ஹெல்ப்லைனில் தொடர்புகொள்ளலாம். Share it.


