News August 26, 2025
புதிய வருமான வரி விதிகள்… டிசம்பரில் முக்கிய அறிவிப்பு

வரும் டிசம்பருக்குள் புதிய வருமான வரி விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த ஆக.,12-ம் தேதி புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உரிய தேதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டாலும் டிடிஎஸ் தொகையை கோர இந்த மசோதா வழிவகுத்துள்ளது. வருமான வரி தாக்கலை எளிமைப்படுத்தும் பல அம்சங்களும் இதில் உள்ளதாம்.
Similar News
News August 26, 2025
Health Tips: சாப்பிட்ட உடன் டீ காபி குடிக்கிறீர்களா? உஷார்!

சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிப்பதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். இது உங்கள் உடல்நலனில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். டீ, காபியில் இருக்கும் Tannic acid நீங்கள் சாப்பிட்ட உணவில் உள்ள சத்துக்களை உங்கள் உடலில் சேரவிடாமல் தடுத்துவிடும். இதனால் சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் டீ, காபி-ஐ தவிர்த்துவிடுங்கள் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News August 26, 2025
BJP வெற்றிக்கு அதிமுகவினரும் உழைக்கணும்: அண்ணாமலை

EPS வெற்றிபெற பாஜகவினர் உயிரைக் கொடுத்து உழைப்பது போல அதிமுகவினரும் பாஜகவினர் ஜெயிக்க உழைக்க வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டார். அதிமுக தலைவர்கள் பாஜக வெற்றிக்கு பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார். ஆணவக்கொலைகள் மீது பாஜக கோபத்தில் இருக்கிறது; 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சாதிவெறியால் கொலை செய்தால், மேஜரானவர்களுக்கு வழங்கும் தண்டனையை அவர்களுக்கும் வழங்க வேண்டுமென்றார்.
News August 26, 2025
இதெல்லாமே ரயிலில் இலவசம் தெரியுமா..

➤ரயிலில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால் டிக்கெட் பரிசோதகரை தொடர்பு கொண்டு இலவச முதலுதவியை பெறலாம்.
➤துரந்தோ, சதாப்தி, ராஜ்தானி போன்ற ரயில்கள் 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக சென்றால், உணவை இந்தியன் ரயில்வே இலவசமாக வழங்கும்.
➤ஒரு ரயில் நிலையத்தில் இறங்கி, மற்றொரு ரயிலுக்காக காத்திருக்க வேண்டிய சூழலில், கான்பார்ம் டிக்கெட் இருந்தால், ஸ்டேஷனின் Waiting Room-ல் இலவசமாக ஓய்வு எடுக்கலாம்.