News February 13, 2025

புதிய வருமான வரி மசோதா இன்று தாக்கல்

image

புதிய வருமான வரி மசோதா பார்லிமென்ட்டில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், 536 பிரிவுகள் உள்ளன. தற்போதுள்ள சட்டத்தில் 14 அட்டவணைகள் உள்ள நிலையில், புதிய சட்டத்தில் இது 16ஆக அதிகரிக்கும். இருப்பினும் 23 அத்தியாயங்களே இருக்கும். அதேநேரம் புதிய வருமான வரி மசோதா 622 பக்கங்களைக் கொண்டதாக இருக்கும். மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஆய்வுக்காக JPCக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News February 13, 2025

பெட்ரோல் காரில் டீசலை நிரப்பினால் என்ன செய்யலாம்?

image

பெட்ரோல் – டீசல் கார்களின் எஞ்சின்கள் வெவ்வேறானவை. எரிபொருளை மாற்றி நிரப்பும் போது, எஞ்சின்கள் கடுமையாக சேதமடையும். இதை பழுதுபார்ப்பதற்கு அதிக பணம் செலவாகும். எனவே, மாற்றி நிரப்பியது தெரியவந்தால், எக்காரணத்தைக் கொண்டும் காரை ஸ்டார்ட் செய்யக் கூடாது. மற்றொரு வாகனத்தின் மூலம் உங்கள் காரை அருகில் உள்ள கார் சேவை மையத்திற்கு இழுத்து சென்று, எரிபொருள் டேங்கை முழுமையாக காலி செய்ய வேண்டும்.

News February 13, 2025

அஜித் டிக் பண்ணப் போகும் டைரக்டர் யார்?

image

‘மகாராஜா’ பட இயக்குநர் நித்திலன் சாமிநாதன் மற்றும் ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா ஆகியோரிடம் நடிகர் அஜித் தரப்பு கதை கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இயக்குநர்களின் படங்களுக்கு அதிக நாள் கால்ஷீட் தேவைப்படாது, அதேபோல் படமும் தரமாக அமைந்துவிடும் என்பதால், தனது ரேஸிங் கெரியருக்கு இடைஞ்சல் வராது என அஜித் இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

News February 13, 2025

சிறந்த CM பட்டியல்: ஸ்டாலின் எத்தனையாவது இடம்?

image

நாடு முழுவதும் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், சிறந்த முதல்வர்களின் பட்டியலை தேசிய ஊடகமான இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. இதில் 5.2% வாக்குகளைப் பெற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 35.3% வாக்குகளுடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல் இடத்தையும், 10.6% வாக்குகளைப் பெற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

error: Content is protected !!