News June 11, 2024
அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம்

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த புதிய மருத்துவக் காப்பீடு மூலம் அரசு மருத்துவமனைகளில் ₹5 லட்சம் முதல் சில நோய்களுக்கு ₹10 லட்சம் வரை மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு அடுத்தாண்டு ஜூன் 30ஆம் தேதி வரை புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் நடைமுறையில் இருக்கும்.
Similar News
News November 11, 2025
இதெல்லாம் இவ்வளவு பழசா? என்ன சொல்றீங்க?

சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட சில உள்நாட்டு பிராண்டுகள், இன்றும் நமது அன்றாட வாழ்வில் இருந்து வருகின்றன. நமது தினசரி பயன்பாட்டில் இடம்பிடித்து காலத்தால் அழியாத பிராண்டுகளாக உருவெடுத்துள்ளன. அவை என்னென்ன பிராண்டுகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்கள் பயன்படுத்தும் பிராண்ட் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 11, 2025
BIHAR EXIT POLL: முழு விவரம்..!

பிஹாரில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின், கருத்துக்கணிப்பு முடிவுகள் இவைதான். அனைத்து கருத்துக்கணிப்புகளும் மீண்டும் NDA ஆட்சி அமைவது உறுதி என தெரிவிக்கின்றன. MGB கூட்டணி அதிகபட்சமாக 108 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜன் சுராஜ், இதர கட்சிகள் 2-13 வரை கைப்பற்ற கூடும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 11, 2025
அதிமுக, விஜய் கூட்டணி… முடிவை அறிவித்தார்

தவெகவுடன் கூட்டணி அமையாததால் அதிமுக விரக்தியில் இருப்பதாக பேசிய TTV தினகரனுக்கு RB உதயகுமார் பதிலளித்துள்ளார். அரசியல் கட்சித் தலைவர்கள் ஜனவரியில்தான் கூட்டணி குறித்து முடிவெடுப்பார்கள் எனத் தெரிவித்த அவர், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதற்கான களப்பணி நடந்து வருவதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கூட்டணிக்கு தவெக வரும் என்பதே அதிமுக முக்கியத் தலைவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


