News August 21, 2025

38 மாவட்டங்களிலும்.. அரசு புதிய அறிவிப்பு

image

வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணிக்கு TN அரசு டெண்டர் கோரியுள்ளது. 38 மாவட்டங்களில் சுமார் 35 லட்சம் வெளிமாநிலத்தவர்கள் பணியாற்றி வருவதாக தகவல் கூறப்படுகிறது. இந்நிலையில், *அவர்கள் தமிழகம் வருவதற்கான காரணம், *எங்கு உள்ளனர் *வாழ்க்கை நிலை *சுகாதார நிலை *என்ன பணி செய்கின்றனர் என்பதை கணக்கெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உங்கள் கருத்து?

Similar News

News August 21, 2025

தவெக மாநாட்டில் பரபரப்பு.. 2 பேருக்கு தீவிர சிகிச்சை

image

மதுரை தவெக மாநாடு திடலில் தொண்டர்கள் இரண்டு பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அவர்களை உடனே மீட்டு மருத்துவக்குழு சிகிச்சை அளிக்கிறது. மாநாட்டில் கலந்து கொள்ள கூட்டம் கூட்டமாக அக்கட்சியின் தொண்டர்கள் படையெடுக்கின்றனர். கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் வெயிலும் கொளுத்தி வருகிறது. இதனால், தவெக தொண்டர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

News August 21, 2025

மூலிகை: நன்மைகளை வாரிக் கொடுக்கும் கீழாநெல்லி!

image

கீழாநெல்லி இலைகளில் ‘பில்லாந்தின்’ என்ற மூலப்பொருள் உள்ளது. இதில் பொட்டாசியம் சத்து மிக அதிகம். இந்த கீழாநெல்லியின் இலை & வேரை அரைத்து பால் அல்லது தயிரில் கலந்து குடித்தால், அது உடலுக்கு பல நன்மைகள் தரும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மஞ்சள் காமாலை, கல்லீரல் பிரச்னைகள், சொறி- சிரங்கு, ரத்த சோகை, கண் பிரச்னைகள் என பல உடல்நல பிரச்னைகளுக்கும் தீர்வு கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

News August 21, 2025

கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய மசோதா நிறைவேற்றம்

image

RCB வெற்றிப் பேரணியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தேசிய அளவில் சர்ச்சையானது. இந்நிலையில், 2025 கூட்ட கட்டுப்பாட்டு மசோதாவை கர்நாடக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதன்படி, நிகழ்வின் நோக்கம், எதிர்பார்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, அதற்கேற்றார்போல் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒரு விண்ணப்பமாக அளித்து, பொதுப்பணி உள்ளிட்ட சில துறைகளில் NOC சான்றும் பெற வேண்டும்.

error: Content is protected !!