News September 29, 2025
IPL-க்கு வரும் இளம் வீரர்களுக்கு புது கண்டிஷன்

U-16 மற்றும் U-19 வீரர்கள் IPL-ல் விளையாட, புதிய விதி ஒன்றை BCCI அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அவர்கள் IPL-ல் விளையாட வேண்டும் என்றால், குறைந்தது ஒரு முதல் தர போட்டியிலாவது விளையாடி இருக்க வேண்டும். டி20 போன்ற குறுகிய கால போட்டிக்குள் நுழையும் முன்னர், இளம் வீரர்கள் முதல் தர கிரிக்கெட் போன்ற நெடிய கிரிக்கெட்டில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 29, 2025
9-வது முறையாக சாம்பியனான இந்தியா

பாக்., ஐ 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் 9-வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. முன்னதாக, 1984, 1988, 1991, 1995, 2010, 2016, 2018, 2023 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி டைட்டிலை தட்டிச் சென்றது. டி20 வடிவிலான ஆசிய கோப்பையில் இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.
News September 29, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 29, 2025
Asia Cup: ஆசிய கோப்பையை வென்றது இந்தியா

ஆசிய கோப்பை 2025-ஐ சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது. பாக்.,ஐ 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பாக்., அணி, இந்தியாவின் அபார பந்துவீச்சால் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 147 ரன்களை சேஸிங் செய்த இந்தியா, 150 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது. 69 ரன்கள் குவித்து திலக் வர்மா வெற்றிக்கு வழிவகுத்தார்.