News August 30, 2025

இந்திய ராணுவத்தில் புதிய கமாண்டோ படை

image

இந்திய ராணுவத்தில் ‘பைரவ்’ எனும் புதிய கமாண்டோ படை பிரிவு உருவாக்கப்பட உள்ளது. ஏற்கனவே காலாட்படையில் இருக்கும் வீரர்களில் 250 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி, நவீன ஆயுதங்கள், டிரோன்கள் வழங்கப்பட்டு இந்த படைப்பிரிவு உருவாக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக வரும் அக்.31-ம் தேதிக்குள் 5 யூனிட் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இவர்கள் சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் நிறுத்தப்பட உள்ளனர்.

Similar News

News August 31, 2025

பொது அறிவு விநாடி வினா கேள்விகள்

image

1. மொழி அடிப்படையில் உருவான முதல் மாநிலம் எது?
2. KFC என்பதன் விரிவாக்கம் என்ன?
3. மனித இதயம் எத்தனை அறைகளைக் கொண்டுள்ளது?
4. இந்தியாவில் தேசிய திரைப்பட விருதுகள் எந்த அமைப்பால் வழங்கப்படுகின்றன?
5. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் யார்?
கேள்விகளுக்கு சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.

News August 31, 2025

மாநாட்டை ஒத்திவைத்த ஓபிஎஸ்.. பின்னணி என்ன?

image

மதுரையில் வரும் 4-ம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநில மாநாட்டை ஒத்திவைப்பதாக OPS, திடீரென அறிவித்துள்ளார். NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர், CM ஸ்டாலினுடன் அடுத்தடுத்து சந்திப்பு, அதிமுக மீட்பு என அடுத்தடுத்து பேசுபொருளானார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலத்தில், அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடுவேன் என OPS கூறியிருந்த நிலையில், தற்போது மாநாட்டையும் ஒத்திவைத்துள்ளார்.

News August 31, 2025

மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் பழம்

image

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த அபாயத்தை இயற்கையாக குறைக்க தினமும் 2 ரம்புட்டான் பழங்களை சாப்பிடும்படி டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த பழத்தில் பொட்டாசியம் & மெக்னீசியம் நிறைந்திருப்பதால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. இதனால், இதய ஆரோக்கியம் மேம்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறது என கூறப்படுகிறது. SHARE IT.

error: Content is protected !!