News February 18, 2025
புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய CEO ராஜீவ்குமாரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, புதிய CEO ஞானேஷ்குமார் நாளை பதவியேற்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பாண்டு பீகார் சட்டமன்றத் தேர்தல், 2026 TN, KL, WB, அசாம், புதுச்சேரி தேர்தல், 2027 UP, குஜராத் உள்பட 6 மாநில சட்டமன்றத் தேர்தல் 2029 நாடாளுமன்றத் தேர்தல் இவரது தலைமையில் நடைபெறவுள்ளது.
Similar News
News November 8, 2025
6 கிலோவில் பிறந்த அதிசய குழந்தை PHOTO ❤️❤️

பிறந்த குழந்தைகள் சராசரியாக 3 கிலோ வரை இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால், ஆஸ்திரேலியாவில் அதற்கு டபுள் மடங்காக 6 கிலோவில் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் பெண் ஒருவர். பெரிய சைஸில் இருக்கும் அந்த பச்சிளம் குழந்தையின் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிரசவத்தின்போது அதிக வலி ஏற்பட்டதாகவும், தான் பிழைக்கமாட்டேன் என எண்ணியதாகவும் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
தினமும் இந்த பழங்களை சாப்பிடலாம்

இந்தப் பழங்கள் வெறும் சுவையானவை மட்டுமல்ல, உங்கள் உடல் விரும்பும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளன. என்னென்ன பழங்கள், நம் அன்றாட ஆரோக்கியத்தில் பங்களிக்கின்றன என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. SHARE பண்ணுங்க. இவை தகவலுக்காக மட்டுமே. ஆலோசனை தேவைப்பட்டால் மருத்துவ நிபுணரை அணுகவும்.
News November 8, 2025
BREAKING: துரைமுருகன் விலகலா..?

திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக் குறைவு, வயது மூப்பு காரணமாக அவர் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது விலகலுக்கு பிறகு ஜெகத்ரட்சகனுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, மேலும் 2 பேரை துணை பொதுச்செயலாளராக்கவும் திமுக திட்டமிட்டு வருகிறதாம்.


