News October 26, 2025

நவ.1 முதல் வங்கி விதிகளில் புதிய மாற்றம்

image

வங்கி கணக்கு மற்றும் லாக்கர் பயன்படுத்தும் பயனர்களுக்கு, நிதி அமைச்சகம் புதிய வாரிசுதாரர் நியமன விதிகளை அறிவித்துள்ளது. நவ.1 முதல் அமலாகும் இந்த விதிகளால், பயனர்கள் தங்களது வங்கி கணக்கு, லாக்கருக்கு நான்கு வாரிசுதாரர்களை நியமிப்பதுடன், அவர்களுக்கு சேர வேண்டிய தொகையின் பங்கையும் குறிப்பிடலாம். பயனர் இறந்தால் நால்வருக்கும் பணம் சென்று சேரும். இதுவரை, ஒரே ஒரு வாரிசுதாரரை மட்டுமே நியமிக்க முடியும்.

Similar News

News October 26, 2025

கழுத்து வலியை விரட்டி அடிக்க சில டிப்ஸ்

image

கழுத்து வலி, கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. கழுத்து வலி என்பது இன்று பலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்னையாக உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், எளிய முறையில் விரட்டியடிக்கலாம். கழுத்து வலியை போக்க, என்னென்ன செய்யலாம் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு தெரிந்த டிப்ஸை கமெண்ட்ல சொல்லுங்க.

News October 26, 2025

Cinema Roundup: ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா?

image

*’LIK’ படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல். *‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நடிக்கிறாராம். *ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘தனுஷ் 55’ படத்தில் ‘பைசன்’ கேமராமேன் எழில் அரசு இணைந்துள்ளார். *ஏ.எல்.விஜய் இயக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

News October 26, 2025

அதிமுக கைகட்டி வேடிக்கை பார்க்காது: EPS

image

சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் குடியிருப்புகளை கட்ட அரசு அனுமதி கொடுத்துள்ளதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு அரணாக இந்த சதுப்பு நிலங்கள் திகழ்வதாகவும், மக்களின் உயிரோடு திமுக அரசு விளையாடுவதை ஏற்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், இதை அதிமுக கைகட்டி வேடிக்கை பார்க்காது என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!