News June 20, 2024
தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்திற்கு புதிய தலைவர்

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக கேரளா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.மணி குமாரை நியமித்து ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் அல்லது மணி குமாரின் 70வது வயது வரை இந்த பதவியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் உள்ளார்.
Similar News
News September 15, 2025
உலகை இயக்கும் இன்ஜின்கள்.. இன்று இன்ஜினியர்கள் டே!

இன்ஜினியரிங் படித்தவன் மட்டும்தான் எந்த துறையிலும் நுழைந்து வென்றுவிடுவான். ஏனென்றால், அவன் 4 ஆண்டுகள் படிப்பது வெறும் பாடத்தை அல்ல.. தத்துவத்தை! தலைசிறந்த பொறியாளராகக் கருதப்படும் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை தான் பொறியாளர் தினமாக கொண்டாடுகிறோம். சினிமா முதல் விளையாட்டு வரை, பாலிடிகஸ் முதல் பிஸினஸ் வரை எங்கும் இன்ஜினியர்கள்தான். நாளைய உலகை சிறப்பாக்கும் அனைத்து இன்ஜினியர்களுக்கு சல்யூட்!
News September 15, 2025
அருண் விஜய்யை ரத்தம் வரும் அளவுக்கு குத்திய நடிகர் தனுஷ்

இட்லி கடை செட்டில் சண்டைக்காட்சியை படம்பிடிக்கும்போது, தான் அருண் விஜய்யை நிஜமாக குத்திவிட்டதால் அவருக்கு ரத்தம் வந்ததாக நடிகர் தனுஷ் பேசியுள்ளார். அப்போது கடுமையாக காயம் ஏற்பட்டிருந்த போதும் ஐஸ் பேக் வைத்துவிட்டு உடனே அடுத்த ஷாட்டுக்கு அருண் விஜய் நடிக்க வந்துவிட்டதாகவும், அந்த இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் 2 மணி நேரம் ஷூட்டிங் நின்றிருக்கும் எனவும் தனுஷ் கூறினார்.
News September 15, 2025
மாதம் ₹2,000 உதவித்தொகை.. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

‘அன்புக்கரங்கள்’ திட்டம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெற்றோர் இருவரையும் இழந்த (அ) ஒருவரை இழந்து, மற்றொருவரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து, தொடர்ந்து பாதுகாத்திட இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 18 வயது வரை மாதந்தோறும் ₹2,000 வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 6,082 மாணவர்கள் இத்திட்டத்தில் பயன் பெறவுள்ளனர்.