News February 28, 2025

SEBIக்கு புதிய தலைவர் நியமனம்

image

SEBIன் புதிய தலைவராக துஹின் கந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான தற்போதைய தலைவர் மாதபியின் பதவிக்காலம் இன்றோடு முடிவடையும் நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு பாண்டே தலைமை ஏற்றுள்ளார். ஒடிஷாவின் 1987 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பாண்டே, நிதித்துறை செயலாளர், மத்திய திட்டக் குழு இணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

Similar News

News February 28, 2025

நாட்டு மக்கள் தவிக்கும் போது.. கனிமொழி சாடல்

image

நாட்டில் 100 கோடி மக்கள் போதிய வருமானமின்றி தவிக்கும் செய்தியை மடைமாற்ற முயல்வதாக பாஜகவையும், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும் டேக் செய்து கனிமொழி எம்பி விமர்சித்துள்ளார். மக்களின் பிரச்னைகளை கவனிக்காமல், கார்ப்பரேட் நலன்களுக்காக மத்திய அரசு பாடுபடுவதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, திமுக அரசு தனது மோசமான நிர்வாகத்தை மறைக்க ஹிந்தி விவகாரத்தை கையில் எடுத்தாக வைஷ்ணவ் விமர்சித்து இருந்தார்.

News February 28, 2025

EPF வட்டியில் மாற்றமில்லை

image

2024-25 நிதியாண்டுக்கான வருங்கால வைப்புநிதி (EPFO) வட்டி விகிதம் மாற்றமின்றி 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டு 8.15 சதவீதமாக இருந்த EPFO வட்டி, கடந்த ஆண்டு 0.10% உயர்த்தப்பட்டது. 2015-16ஆம் ஆண்டு 8.8 சதவீதமாக இருந்த EPFO வட்டி படிப்படியாக குறைந்து, தற்போது இந்நிலைக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 7 கோடி பயனர்கள் இந்த EPFO திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர்.

News February 28, 2025

காவல்துறை சம்மன்.. நேரம் குறித்த சீமான்

image

நடிகையின் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் இன்று மாலை 6 மணிக்கு வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராவதாக சீமான் தெரிவித்துள்ளார். தருமபுரியில் பேசிய அவர், வீட்டில் ஆட்கள் இல்லாதது போல் சம்மனை சுவற்றில் ஒட்டியது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். சீமானின் இந்த பேட்டியைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு வளசரவாக்கத்தில் திரள நாம் தமிழர் பலரும் சோஷியல் மீடியாவில் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!