News April 17, 2025
நில ஆவணங்களை எளிதாக அறிய புதிய செயலி!

நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை, அறிய புதிய செயலியை வருவாய் துறை உருவாக்கி வருகிறது. செல்போனில், ‘Tamilnilam Gioinfo’ செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில், தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ, அந்த இடத்தின், கூகுள் மேப்புடன், சர்வே எண் விவரங்கள் டிஸ்பிளே ஆகும். அடுத்த சில மாதங்களில், இந்த செயலி செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இது வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்க்க உதவும்.
Similar News
News April 19, 2025
சார்தாம் யாத்திரைக்கு ரெடியா நீங்க?

பிரசித்தி பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோயில்களுக்கும் பக்தர்கள் செல்வது தான் சார்தாம் யாத்திரை. ஆண்டுதோறும் குளிர்காலங்களில் மூடப்பட்டு கோடை காலத்தில் அட்சய திருதியை நாளில் கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் திறக்கப்படும். இதன் தொடர்ச்சியாக வரும் மே 2ல் கேதார்நாத்தும், மே 4ல் பத்ரிநாத் கோயில் நடையும் திறக்கப்படுகிறது.
News April 19, 2025
போர் நிறுத்த முயற்சி: டிரம்ப் ஒதுங்க என்ன காரணம்?

ரஷ்யா கடந்த 2014ல் படையெடுப்பு மூலம் உக்ரைனின் கிரீமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இது சட்டவிரோதமானது என சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. தற்போது போரை முடிவுக்கு கொண்டு வர, உக்ரைனை ரஷ்யாவின் பகுதியாக அங்கீகரிக்க அதிபர் டிரம்ப் விரும்புகிறார். ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதை ஏற்க மறுக்கிறார். இந்த பிடிவாதம் தான் அமைதி பேச்சில் இருந்து டிரம்ப் ஒதுங்க காரணமாக கூறப்படுகிறது.
News April 19, 2025
அதிமுக கூட்டணியிலிருந்து SDPI விலகல்: அபூபக்கர் அறிவிப்பு

அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் அறிவித்துள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் அழிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எந்த அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரம், தற்போது SDPI எந்த அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி வைக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.