News March 14, 2025
ராமேஸ்வரத்தில் புதிய விமானநிலையம்!

ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். பாம்பன் பாலம் சீரமைக்கப்பட்டு வருவதால் ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு செல்வதில் ரயில் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரம் செல்ல வசதியாக, புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
Similar News
News July 11, 2025
நாடக உலகின் ஜாம்பவான் ஃபிராங்க் பேர்ரி காலமானார்

5 தசாப்தங்களாக நாடக உலகில் அசத்தி ‘Acting legend’ அழைக்கப்பட்ட ஃபிராங்க் பேர்ரி(88) காலமானார். 1959-ல் நாடக உலகில் அறிமுகமான இவர், ‘Bristol Old Vic’ நாடகத்தை 53 நாடுகளில் அரங்கேற்றியுள்ளார். ஷேக்ஸ்பியரின் கதைகளில் நடித்துப் பிரபலமான இவருக்கு, உலக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. உடல் நலக்குறைவால் காலமான ஃபிராங்க் பேர்ரிக்கு உலகம் முழுவதும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News July 11, 2025
முறியடிப்பதற்கே சாதனைகள்: லாரா

டெஸ்டில் 4 சதங்கள் சாதனையை முறியடிக்க <<16984490>>வாய்ப்பு கிடைத்தால்<<>>, அதை செய்ய வேண்டுமென வெ.இண்டீஸ் லெஜண்ட் பிரயன் லாரா தனக்கு ஆலோசனை கூறியதாக SA கேப்டன் வியான் முல்டர் தெரிவித்துள்ளார். ‘உங்களுடைய லெகசியை நீங்கள் உருவாக்க வேண்டும். சாதனைகள் முறியடிப்பதற்கே’ என்று லாரா அப்போது கூறியுள்ளார். லாராவின் சாதனையை(400*) முறியடிக்க முனையாமல், 367* ரன்னில் முல்டர் டிக்ளேர் செய்தது குறிப்பிடத்தக்கது.
News July 11, 2025
உங்களை தவிர யாருமில்லை.. அன்புமணி உருக்கம்

டாக்டர் ராமதாஸுடன் மோதல் போக்கு நிலவும் நிலையில், பாமகவினருக்கு அன்புமணி உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், பாமகவினருக்காக தான் இருப்பதாகவும், கட்சித் தொண்டர்களைத் தவிர தனக்கு வேறு எவருமில்லை என தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம் என்றும், இது உறுதி என்றும் கட்சியினரை அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.