News February 13, 2025

விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள்

image

RBI புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் கூடிய புதிய ₹50 நோட்டுகள் விரைவில் சந்தையில் அறிமுகமாக உள்ளது. இதனை RBI உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான நோட்டுகள் EX ஆளுநர் கையெழுத்துடன் அச்சிடப்பட்டவை. கடந்த ஆண்டு பொறுப்பேற்ற சஞ்சய் பெயரில் புதிய ₹50 நோட்டுகளை அச்சிட முடிவு செய்துள்ளது. அதேநேரம், தற்போதுள்ள ₹50 நோட்டுகளும் செல்லுபடியாகும் என தெளிவுபடுத்தியுள்ளது.

Similar News

News February 13, 2025

பாலியல் புகாரில் சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்

image

சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏற்கெனவே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாரணை நடத்த விசாகா கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

News February 13, 2025

காய்கறி, பூண்டு விலை சரிவு

image

சுப முகூர்த்தம், தைப்பூசம் காரணமாக சில வாரங்களாக அதிகரித்திருந்த காய்கறி, பூண்டு விலை இன்று(பிப்.13) கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ₹15 – ₹25, கத்திரிக்காய் – ₹35 – ₹45, கேரட் – ₹40, சின்ன வெங்காயம் – ₹30 – ₹70, பெரிய வெங்காயம் – ₹20 – 30, உருளைக்கிழங்கு ₹15 – ₹25, பூண்டு 80 – 100க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News February 13, 2025

முத்தத்தில் இத்தனை வகைகளா..?

image

*கைகளில்: மரியாதையின் வெளிப்பாடு *நெற்றியில்: இந்த வாழ்நாள் உன்னுடனே என அர்த்தம் *மூக்கில்: ரொம்ப அழகாக இருக்கிறாய் என அர்த்தம் *கன்னத்தில்: உன்னுடன் இருக்கணும் என அர்த்தம் *கண்களில்: உலகில் வேறு யாரையும் இவ்வளவு காதலிக்கவில்லை என அர்த்தம் *உதட்டில்: என் உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன் என அர்த்தம். இன்னைக்கு கிஸ் டே.. அதனால் முத்தம் கொடுக்க மறந்துடாதீங்க.

error: Content is protected !!