News January 23, 2025

புதிய 350 ரூபாய் நோட்டுகளா? உண்மை இதுதான்

image

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் புதிய ₹2000, ₹500, ₹200, ₹100, ₹50 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், ₹2000 நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டது. இந்நிலையில், புதிதாக ₹350 மற்றும் ₹5 நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஆனால், இதுபோன்ற புதிய ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ வெளியிடவில்லை. இவை அனைத்தும் போலியான புகைப்படங்கள்.

Similar News

News October 24, 2025

திமுக கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை: நயினார்

image

சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விழாவிற்கு தன்னை அழைக்கவில்லை என்று செல்வப்பெருந்தகை அறிக்கை விட்டிருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இப்படிப்பட்டவர்களின் அரசால், தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதி தர முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News October 24, 2025

பிஹார் தேர்தல்: பல துணை முதல்வர் வேட்பாளர்கள்

image

பிஹாரில் எதிர்க்கட்சிகளின் சார்பில் இன்னும் பல துணை முதல்வர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என, CM வேட்பாளரும், RJD தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று பிஹார் மக்கள் தொகையில் 2.5% உள்ள மீனவர் சமுதாயத்தை சேர்ந்த முகேஷ் சஹானி, துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், ஆளும் NDA கூட்டணியின் CM வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News October 24, 2025

சின்ன செயல் பெரிய பலன்.. ட்ரை பண்ணுங்க

image

சில செயல்கள் இயற்கையாகவே நமது உடல் மற்றும் மனதை புத்துணர்வோடு வைத்துக்கொள்ள உதவும். அவை என்னென்ன விஷயங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை, ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்தது எது? கமெண்ட்ல சொல்லுங்க. மேலும், இதை உங்க நண்பர்களுக்கு share பண்ணுங்க.

error: Content is protected !!