News April 5, 2025
புதிய ₹500, ₹10 ரூபாய் நோட்டுகள்: RBI அறிவிப்பு

₹500 மற்றும் ₹10 கரன்சி நோட்டுகள் புதிதாக வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. காந்தி படங்கள் கொண்டிருக்கும் தற்போதைய கரன்சி நோட்டின் வடிவமைப்பில் எந்த மாற்றமும். ஆனால், புதிதாக ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்றுள்ள சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்து புதிய நோட்டுகளில் இடம்பெறும். பழைய நோட்டுகளும் செல்லும். ₹100, ₹200 நோட்டுகளும் கூட விரைவில் மல்ஹோத்ரா கையெழுத்துடன் வெளியாக உள்ளன.
Similar News
News April 12, 2025
IPL: குஜராத் அணி முதலில் பேட்டிங்..!

புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியும், 6-வது இடத்தில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியும் சற்றுநேரத்தில் (பிற்பகல் 3.30 மணி) பலப்பரீட்சை நடத்த உள்ளன. குஜராத் அணி விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் வென்றுள்ளது. அதேபோல், 5 போட்டிகளில் விளையாடி லக்னோ அணி மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டும். இன்று வெல்லப் போவது யார்?
News April 12, 2025
ஜம்மு – காஷ்மீர் என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு – காஷ்மீரின் கிஷ்த்வா, அக்னூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த தீவிரவாதிகள் JeM அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும், சீனாப் பள்ளத்தாக்கில் பதுங்கிருந்தததும் தெரியவந்துள்ளது. மேலும், AK-47, M4 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
News April 12, 2025
IPL: வெளியேறிய முக்கிய வீரர்!

நடப்பு IPL தொடரில் இருந்து, க்ளென் பிலிப்ஸ் காயம் காரணமாக விலகியிருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. GT அணிக்காக விளையாடி வரும் இவர், SRH அணிக்கு எதிரான மேட்ச்சின் போது, இடுப்பில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக பிலிப்ஸ் நியூசிலாந்து புறப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இன்று GT அணி, LSG அணியை எதிர்கொள்ள உள்ளது.