News August 20, 2024
அவரைப் போன்ற கேப்டனை பார்த்ததில்லை: விக்ரம் ரத்தோர்

ரோஹித் ஷர்மாவைப் போல திட்டமிடுதலுக்காக அதிக நேரம் செலவிடும் கேப்டனை, தான் இதுவரை பார்த்ததில்லை என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார். தனித்தனியே மீட்டிங்கை நடத்தி, வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பார் எனக் கூறிய அவர், வெற்றிக்கான தந்திரம் அறிந்த ரோஹித்தை எளிதில் புரிந்துகொள்ள முடியாது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
Similar News
News March 12, 2026
அடுத்த டார்கெட் கூகுள், மைக்ரோசாப்ட் தான்: ஈரான்

தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் தாக்கப்படும் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் பட்டியலில் பட்டியலில், கூகுள், மைக்ரோசாஃப்ட், IBM போன்ற நிறுவனங்கள் இருப்பதாக தஸ்னிஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள US நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News March 12, 2026
கருணாநிதி குடும்பத்துக்கு இறுதி தேர்தல்: EPS

திமுக கூட்டணியில், அதன் கூட்டணிக் கட்சிகள் அடிமையாக இருப்பதாக EPS விமர்சித்துள்ளார். NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் மோசமான, கையாலாகாத திமுக அரசை அகற்றுவதே அதிமுக கூட்டணியின் நோக்கம் என்றார். இந்த தேர்தல் தான் கருணாநிதி குடும்பத்துக்கு இறுதி தேர்தல் எனவும் கூறினார். மேலும், காங்கிரஸிடம் கெஞ்சி திமுக கூட்டணி வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


