News May 2, 2024

பயிற்சி இல்லாமல் மலை ஏறாதீர்கள்

image

பக்தி மார்க்கமாக வெள்ளியங்கிரி மலை ஏறியவர்களில் இந்த ஆண்டு மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சோளிங்கர் மலை ஏறிய ஒருவர் மரணமடைந்திருக்கிறார். வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில் மலையேறுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. உடல் உஷ்ணமடைதல், நீர்ச்சத்து குறைபாடு ஆகியவை உயிரையே பறிக்கலாம். முறையான பயிற்சி இல்லாதவர்கள் மலையேறுவதைத் தவிர்த்திடுங்கள். பொதுநலன் கருதி வெளியிடுவது Way2News.

Similar News

News September 21, 2025

டாஸ்மாக் கடைகளில் இனி ரூல்ஸ் மாறுது!

image

மதுக்கடைகளில் இனி வாடிக்கையாளர்களை வரிசையில் நிற்க வைத்து மதுபானங்களை விற்பனை செய்ய டாஸ்மாக் பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. அதனால், கடைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா காலத்தில் மதுப்பிரியர்களை வரிசையில் நிற்க வைத்து சமூக இடைவெளியுடன் மது விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த ரூல்ஸ் உங்களுக்கு ஓகேவா?

News September 21, 2025

55,000 பேருக்கு வேலைவாய்ப்பு: ஸ்டாலின்

image

தூத்துக்குடியில் ₹30 ஆயிரம் கோடி முதலீட்டில், 55,000 பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் 2 கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதியதொரு அடித்தளமாக அமையும் என்றும் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இதன் மூலம் சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாறு தற்போது தூத்துக்குடியில் அமையவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

News September 21, 2025

நவராத்திரியும் 9 தேவிகளும்

image

நாளைமுதல் நவராத்திரி விழா 9 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இந்த 9 நாள்களும், 9 தேவியை வழிபடுவார்கள். எந்த நாளில் எந்த தேவியை வழிபட வேண்டும் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்களும் உங்க வீட்டில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி கொண்டாடுவீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!