News July 16, 2024

ஆள் மாற்றி ட்ரோல் செய்த நெட்டிசன்கள்

image

இன்ஸ்டா பிரபலம் ரேஷ்மாவை, தீ விபத்தில் உயிரிழந்த கேப்டன் அன்ஷுமன் சிங்கின் மனைவி ஸ்மிருதி சிங் என தவறாக கருதி நெட்டிசன்கள் ட்ரோல் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கேப்டன் அன்ஷுமன் சிங் இறந்த பிறகு ஸ்மிருதி சிங் அவரது தாய் வீட்டிற்கு சென்றதை விமர்சித்து, அவரை போலவே இருக்கும் ரேஷ்மா கணக்கில் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், தான் ஸ்மிருதி இல்லையென அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Similar News

News March 30, 2026

தவெக கட்சியினர் பால்வாடிகள்: சேகர் பாபு

image

விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் தவெகவின் செயல்பாட்டை சேகர் பாபு கிண்டலடித்து பேசியுள்ளார். பிரசாரத்துக்கு எப்படி அனுமதி வாங்க வேண்டும் என்பது கூட தெரியாத பால்வாடிகள்(தவெகவினர்) என விமர்சித்த அவர், இவர்கள் எப்படி தேர்தலை சந்தித்து ஆட்சி அமைப்பார்கள் என சாடியுள்ளார். மேலும், மே 4-ம் தேதி அனைத்துக்கும் தீர்ப்பு கிடைத்துவிடும் என்றார்.

News March 30, 2026

நடிகை ஜனனிக்கு டும் டும் டும்❤️❤️

image

அவன் இவன், தெகிடி போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஜனனி வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அவர் தனது காதலரான சாய் ரோஷன் ஷாமை இன்று திருமணம் செய்துகொண்டார். காதல் கணவருடன் இருக்கும் போட்டோக்களை ஜனனி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். கடந்தாண்டு எளிமையான முறையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

News March 30, 2026

IPL டாஸ்: CSK பேட்டிங்

image

CSK-க்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற RR, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் ஆட்டத்தில் தோனி மற்றும் டிவால்ட் பிரேவிஸ் பங்கேற்காதது CSK-வுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கவுகாத்தியில் நடைபெறும் இந்த போட்டி பேட்டிங், பவுலிங் இரண்டுக்குமே சாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி சரியாக 7.30 மணிக்கு தொடங்கும்.

error: Content is protected !!