News April 5, 2024
கங்கனாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

இமாச்சலின் மண்டி தொகுதி வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத்தை பாஜக களம் இறக்கியுள்ளது. தொடர்ந்து சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டு வரும் அவர், அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி எங்கே போனார்? என்று கேள்வி எழுப்பினார். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜியா? என அவரைக் கிண்டல் செய்து வருகின்றனர்.
Similar News
News January 21, 2026
ஜனவரி 21: வரலாற்றில் இன்று

*1924 – சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மறைந்தார். *1945 – இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ராஷ் பிஹாரி போஸ் மறைந்தார். *1972 – திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியவை இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன. *2009 – செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் அமைக்கப்பட்டது. *2017 – தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் உச்சத்தை எட்டியது.
News January 21, 2026
இணையதளங்களின் வர்த்தகத்தை பாதிக்கும் AI

கூகுள் தேடல் மூலம் இணையதளங்களுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதாம். தற்போது, தேடல் தொடர்பான தகவல்கள், AI உதவியுடன் சுருக்கமாக வருகிறது. இதனால், பயனர்கள் இணையதளங்கள் உள்ளே செல்வதற்கான தேவை குறைகிறது. இந்நிலையில், Google Search Traffic அடுத்த 3 ஆண்டுகளில் 40% குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறைவதால் இணையதளங்களின் வர்த்தகம் பாதிப்படையும்.
News January 21, 2026
வீடுவீடாக போய் உள்ளாடை திருட்டு: இளைஞர் கைது

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில், பெண்களின் உள்ளாடைகளை குறிவைத்து திருடிவந்த 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். வீடுகளில் காயப்போடப்பட்டிருந்த உள்ளாடைகளை திருடுபோவதாக புகாரளிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் CCTV வைத்து ஆய்வு செய்து சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்தனர். மேலும், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், திருடுபோன உள்ளாடைகள் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


