News December 4, 2024
சோகத்தில் மூழ்கிய நேத்ரனின் குடும்பம்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழக இல்லங்களில் அனைவருக்கும் பரிச்சயமான ‘நேத்ரன்’ நேற்று உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாகவே அவர் புற்றுநோயால் அவதியுற்று வருவதாக அவரது மகள் அபிநயா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், மனைவியையும் இரண்டு மகள்களையும் தவிக்கவிட்டு நேத்ரனின் உயிர் நேற்று பிரிந்தது. இதனால், அவரது குடும்பம் மட்டுமல்லாமல் சின்னத்திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
Similar News
News December 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 560 ▶குறள்: ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். ▶பொருள்: ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.
News December 25, 2025
நக்சலைட் ஆவதே குறிக்கோளாக இருந்தது: ஆதவ்

கல்லூரி பருவத்தில் அரசியல்வாதிகளை பார்த்தால் துப்பாக்கி எடுத்துச் சுட வேண்டும் என்று ஒரு கோபம் இருக்கும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதனால் காலேஜ் முடித்துவிட்டு நக்சலைட் ஆக வேண்டும் என்பதே தன்னுடைய குறிக்கோளாக இருந்ததாகவும் வெளிப்படையாக கூறியுள்ளார். ஆனால், அந்த எண்ணத்தில் இருந்து தன்னை மாற்றியது பேராசிரியர் அலெக்ஸாண்டர் தான் என தனது ஆசிரியரையும் நினைவுகூர்ந்துள்ளார்.
News December 25, 2025
பவுமாவிடம் மன்னிப்பு கேட்ட பும்ரா, பண்ட்

SA உடனான டெஸ்ட்டின்போது, கேப்டன் <<18291955>>பவுமாவை<<>> பும்ராவும், பண்ட்டும் கேலி செய்தது சர்ச்சையானது. ஆனால், ஆட்டநேர முடிவில் இருவரும் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக பவுமா தெரிவித்துள்ளார். களத்தில் கூறப்பட்டது, களத்தோடு விட்டுவிட வேண்டும், தனிப்பட்ட பகையாக எடுத்துக் கொள்ளk கூடாது எனவும், அதேபோல், இந்தியாவை மண்டியிட செய்வோம் என தங்கள் அணி பயிற்சியாளரும் பேசியிருக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.


