News January 23, 2025
நேதாஜியின் தியாகத்தை ஈடுசெய்ய முடியாது: மோடி

நாட்டின் சுதந்திரத்திற்காக நேதாஜி அளித்த பங்களிப்பை எதனாலும் ஈடுசெய்ய முடியாது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நேதாஜியின் பிறந்ததினத்தையொட்டி அவர் பதிவிட்டுள்ளார். அதில், பராக்ரம தினமான இன்று நேதாஜிக்கு தனது வணக்கத்தை செலுத்துவதாக கூறியுள்ளார். அவரது தொலைநோக்கு பார்வை தங்களுக்கு உத்வேகமாக இருப்பதாகவும், அவர் கண்ட இந்தியாவை உருவாக்க உழைத்து வருவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 15, 2025
GBUவுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக சென்னை HC-ல் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து பாடல்களை பயன்படுத்த கோர்ட் இடைக்கால தடைவிதித்திருந்தது. இந்நிலையில், உத்தரவை மீறி படத்தில் தொடர்ந்து பாடல்கள் பயன்படுத்தப்படுவதாக இளையராஜா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் GBU தயாரிப்பு நிறுவனத்துக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
News September 15, 2025
தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டும்: சவுரவ் கங்குலி

இந்தியா, பாகிஸ்தான் மட்டுமன்றி, உலகம்முழுவதும் தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அதேசமயம் எதற்காகவும் விளையாட்டை நிறுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார். பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய அணி கைகுலுக்காதது குறித்த கேள்விக்கு, எல்லாருக்கும் அவரவர் பக்கம் ஒரு வாதம் இருக்கும் என பதில் அளித்தார்.
News September 15, 2025
சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர்

உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 1,000 மீ ஓட்டத்தில், இந்திய வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இவர், நேற்று நடைபெற்ற 500 மீ ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியிருந்தார். கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற உலக போட்டிகளின் 12-வது சீசனிலும் வெண்கலம் வென்றிருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த இவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.