News April 16, 2025
நேதாஜியின் நண்பர் காலமானார்

நேதாஜியின் நெருங்கிய நண்பரான நாகலாந்தை சேர்ந்த Poswuyi Swuro (106) நேற்று காலமானார். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் நாகலாந்து நோக்கி முன்னேறியபோது வழிகாட்டியாகவும், நேதாஜியின் மொழி பெயர்ப்பாளராகவும் Poswuyi Swuro செயல்பட்டார். நேதாஜியுடன் தொடர்பு கொண்டவர்களில் இவர் மட்டுமே உயிருடன் இருந்தார். நாகாலாந்தில் கிராம பஞ்சாயத்து தலைவராகவும், கிறிஸ்தவ தேவாலய பாஸ்டராகவும் இருந்துள்ளார். RIP.
Similar News
News October 22, 2025
BREAKING: நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை

தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலை முதல் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய நவ.15(சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
News October 22, 2025
சவுதி அரேபியாவில் வேலை செய்பவர்களுக்கு குட் நியூஸ்

சவுதியில் 50 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த ‘Kafala’ எனும் தொழிலாளர் நடைமுறையை அந்நாட்டு அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இனி புலம்பெயர் தொழிலாளர்கள், ஸ்பான்சர் (முதலாளிகள்) ஒப்புதல் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறவும், வேலைகளை மாற்றிக் கொள்ளவும் முடியும். நவீன அடிமைத்துவம் என வர்ணிக்கப்படும் ‘Kafala’ நடைமுறையில், முதலாளிகள் தங்களது தொழிலாளர்கள் மீது முழு ஆதிக்கம் செலுத்தினர்.
News October 22, 2025
கண்களை கவரும் கலர்புல் தெருக்கள்… வாவ் PHOTOS!

உலகளவில் மிகவும் வண்ணமயமான, கண்களை கவரும் 10 தெருக்களின் புகைப்படங்களை மேலே வழங்கியுள்ளோம். ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. இதேபோல், நீங்கள் நேரில் பார்த்த கலர்புல் தெரு அல்லது இடங்களை கமெண்ட் பண்ணுங்க. மேலும், இதை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து, அவர்களையும் கமெண்ட் செய்ய சொல்லுங்க!