News April 25, 2024

நெஸ்லே நிறுவனத்தின் லாபம் 27% உயர்வு

image

நெஸ்லே இந்தியா நிறுவனம் கடந்த நிதியாண்டின் 4 ஆவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிகர லாபம் 27% அதிகரித்து ரூ.934.17 கோடியாக உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.736.64 கோடியாக இருந்தது. வருவாயைப் பொறுத்தமட்டில், 8.84% உயர்ந்து ரூ.5,294.34 கோடியாக உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் வருவாய் ரூ.4,864.22 கோடியாக இருந்தது. இதனிடையே, பங்கு ஒன்றுக்கு ரூ.8.50 ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 6, 2026

அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

image

<<19303686>>காவலாளி அஜித் குமார்<<>> மரண வழக்கில் மதுரை ஐகோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் குற்றப்பத்திரிகையில் மானாமதுரை டிஎஸ்பி உள்ளிட்ட 4 போலீஸ்காரர்களின் பெயர்களை CBI சேர்த்திருந்தது. இந்நிலையில், மார்ச் 12 வரை அந்த 4 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்யும் வரை சிபிஐ எந்த விசாரணையும் நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 6, 2026

இதுதான் என்னுடைய கனவு.. ஸ்டாலின் சொல்கிறார்

image

TN முழுவதுமே சமத்துவபுரமாக மாறவேண்டும், எங்கும் சமூகநீதி ஒலிக்க வேண்டும், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே தன்னுடைய கனவு என CM ஸ்டாலின் கூறியுள்ளார். இவை அனைத்தும் பெற, மாவட்ட வாரியாக தனித்தனி செயல்திட்டம் வகுக்கப்படும் என்ற அவர், இது மு.க.ஸ்டாலின் கொடுக்கும் உறுதிமொழி என்றார். மேலும், TN-ன் இந்த வளர்ச்சி பயணத்தில் யாரையும் பின்தங்க விடமாட்டோம் என்றும் அவர் கூறினார்.

News March 6, 2026

UPSC தேர்வு முடிவுகள் வெளியானது

image

நாடு முழுவதும் UPSC நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அனுஜ் அக்னிஹோத்ரி என்பவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து ராஜேஸ்வரி சுவே இரண்டாம் இடத்தையும், அகன்ஷ் துல் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். UPSC தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை <>கிளிக்<<>> பண்ணுங்க.

error: Content is protected !!