News September 9, 2025

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் செல்லும் நேபாளம்

image

ஜென் Z இளைஞர்களின் போராட்டத்தால் நேபாளத்தின் ஆட்சியே கவிழ்ந்துவிட்டது. பிரதமர் சர்மா ஒலி ராஜிநாமா செய்துவிட்டார். இப்போது அவர் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் பலரும் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில், இந்த வன்முறை போராட்டத்தின் விளைவாக ராணுவம் ஆட்சியை கட்டுப்பாட்டில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு மீண்டும் ஜனநாயகம் திரும்புமா? அதுவும் ஒரு வங்கதேசமாக மாறுமா?

Similar News

News March 3, 2026

மார்ச் 3: வரலாற்றில் இன்று

image

*உலக வனவிலங்கு நாள் *1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிப்பு *1940 – வரலாற்றாய்வாளர் கடம்பி மீனாட்சி நினைவு நாள் *1941 – ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பிறந்தநாள் *1944 – பாடகர் ஜெயச்சந்திரன் பிறந்தநாள் *1985 – நடிகை வரலட்சுமி சரத்குமார் பிறந்தநாள் *2011 – விண்வெளி அறிவியலாளர் வெங்கடராமன் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

News March 3, 2026

கமேனியின் பேத்தியும் உயிரிழப்பு (PHOTO)

image

இஸ்ரேல், USA நடத்திய தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் கமேனி, அவரது மகள், மருமகன் உள்பட பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், கமேனியின் ஒன்றரை வயது பேத்தி ஜஹ்ரா முகமதியின் போட்டோ SM-ல் வைரலாகி வருகிறது. உலகில் உதிர்ந்த கொஞ்ச நாள்களிலேயே எந்தவித தவறும் செய்யாத அந்த குழந்தை இறந்தது வருத்தமளிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். முன்னதாக, கமேனி தங்கியிருந்த பகுதியில் 30 ஏவுகணைகள் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News March 3, 2026

இனியாவது திருந்துமா திமுக அரசு? நயினார்

image

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி அளிப்பது பற்றி TN அரசு மார்ச் 4.ல் பதிலளிக்க மதுரை HC உத்தரவிட்டுள்ளது. இதை X பதிவில் சுட்டிக்காட்டியுள்ள நயினார், திமுக அரசு தனது தவறை உணர்ந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். இனியும் இந்துக்களின் உரிமையை முடக்க திட்டமிட்டால், கோர்ட் வழங்கும் இறுதிதீர்ப்பின் போது திமுக அரசு முற்றிலும் முடங்கும் என கூறியுள்ளார்.

error: Content is protected !!