News May 4, 2024
இந்திய வரைபடத்துடன் நேபாள் ரூபாய் வெளியீடு

இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துடன் கூடிய புதிய ரூபாய் நோட்டை வெளியிட்டு நேபாள அரசு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டில், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதனை அச்சிடுவதற்கு அந்நாட்டின் பிரதமர் புஷ்பகமல் பிரசந்தா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலளித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.
Similar News
News August 11, 2025
இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான்

இந்தியாவுடனான மோதலுக்கு பின் 2-வது முறையாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் அமெரிக்கா சென்றுள்ளார். இதனிடையே, இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் அணு ஆயுதத்தை வைத்து பாதி உலகையே அழித்து விடுவோம் என அசிம் முனிர் எச்சரித்துள்ளார். சிந்து நதியில் இந்தியா அணை கட்டும் வரை காத்திருப்போம் என கூறிய அவர் கட்டிய பின் ஏவுகணைகளால் அதை அழித்துவிடுவோம் என தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
BREAKING: தங்கம் விலை ₹560 குறைந்தது

கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று தலைகீழாக குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 குறைந்து ₹75,000-க்கும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹9,375-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ₹127-க்கும், கிலோ வெள்ளி ₹-1,27,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News August 11, 2025
EC நீதிமன்றம் அல்ல: ப.சிதம்பரம் காட்டம்

புகார்களை கையாள்வதில் தேர்தல் ஆணையம்(EC), நீதிமன்றம் போல் செயல்பட முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்தும் பொறுப்புமிக்க நிர்வாக அமைப்புதான் EC என்றும் கூறியுள்ளார். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடந்த முறைகேடுகள் குறித்த புகாரை நிராகரிக்க முடியாது என தெரிவித்த அவர் கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் EC கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.