News September 9, 2025
நேபாளம் போராட்டம்: விசாரணைக் குழு அமைப்பு

நேபாளத்தில் FB, Insta உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்ற Gen Z தலைமுறையினரின் போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அதற்கான தடை விலக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வருத்தம் தெரிவித்த அந்நாட்டு PM ஷர்மா ஒலி, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டு, 15 நாள்களுக்குள் அறிக்கை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 9, 2025
வார விடுமுறை நாள்களை விஜய் குறிவைப்பது ஏன்?

தவெக தலைவர் விஜய், பக்கா ஸ்கெட்ச் போட்டு, செப்.13-ம் தேதி முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். குறிப்பாக, வார விடுமுறை நாளான சனி, ஞாயிறு தான் அவரின் டார்கெட். இதற்கு முக்கிய காரணம், விடுமுறை நாளில் அனைவரும் வீட்டில் இருப்பார்கள்; இதனால், தனது தேர்தல் பரப்புரை பேச்சை, மக்கள் அதிகளவில் நேரலையில் பார்க்க முடியும். அதேபோல், எளிதாக கூட்டத்தை சேர்க்க முடியும் என கணக்குப்போட்டு இருக்கிறாராம்.
News September 9, 2025
தங்கத்தை விட வரலாறு காணாத விலை உயர்வு

தங்கத்தை விட % அடிப்படையில் வெள்ளி விலை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் & தேவை அதிகரிப்பால், MCX-இல் (Multi Commodity Exchange) ஒரு கிலோ வெள்ளி இன்று ₹1,26,200-க்கு மேல் 0.5% உயர்ந்து வர்த்தகமானது. 2025-ம் ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை, வெள்ளி விலை MCX வர்த்தகத்தில் 45% மேல் உயர்ந்துள்ளது. இது, தங்கத்தின் 42% உயர்வையும் மிஞ்சியுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி $41.2 ஆக உள்ளது.
News September 9, 2025
தேர்தல் வரை தூக்கத்தை மறந்திடுங்க: ஸ்டாலின்

திமுக மாவட்டச் செயலாளர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் முடியும் வரை, ஓய்வு என்ற சொல்லையே மறந்துவிடுங்கள் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார். 2026-ல் நாம் பெறப்போகும் வெற்றி, திமுகவின் வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகத்துக்கான வெற்றி எனக் கூறிய அவர், செப்.20-ம் தேதி திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.