News August 24, 2024
நேபாள பேருந்து விபத்து: பலி 41ஆக உயர்வு

நேபாளத்தில் நேரிட்ட பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து நேபாளத்துக்கு பேருந்தில் ஆன்மிக சுற்றுலாவாக 43 பேர் சென்றிருந்தனர். காத்மாண்டு நோக்கி பேருந்து சென்றபோது, மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நேற்று 27 பேர் பலியான நிலையில் இன்று மேலும் 14 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.
Similar News
News March 5, 2026
விஜய்யின் திமுக எதிர்ப்பை பாராட்டுகிறேன்: தமிழிசை

திமுகவை விரட்ட வேண்டும் என்பது மட்டுமே தங்களின் குறிக்கோள் என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். திமுகவின் தவறுகளையும், நீட் விலக்கு, கேஸ் மானியம் உள்ளிட்ட திமுகவின் பொய் வாக்குறுதிகளை விஜய் தெளிவாக எடுத்துச் சொல்வதாகவும், அவரது திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை தான் பாராட்டுவதாகவும், மற்றபடி திமுக – அதிமுக டீலிங் என்று விஜய் விளையாட்டாக பேசி வருவதாக குறிப்பிட்டார்.
News March 5, 2026
நகைக் கடன்.. முக்கிய அப்டேட்

நகைக் கடன் பெற முயற்சிப்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த செய்தி. குறைந்த வட்டியில் கடன் பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (8.05 – 8.55%), இந்தியன் ஓவர்சீஸ் (8.20%), PNB (8.35 – 9.25%), SBI (8.70 – 9%), கனரா (8.75 – 9.25%) ஆகியவே குறைந்த வட்டி விகிதத்தில் நகைக் கடன் வழங்கி வருகின்றன. இதில், ஏதேனும் ஒன்று தேர்வு செய்து கடன் பெற்றால் வட்டி சுமை குறையும். SHARE
News March 5, 2026
கமேனி கொலை: இந்தியா மௌனம் கலைத்தது

ஈரான் உச்ச தலைவர் கமேனியின் மறைவுக்கு இந்தியா பல நாள்கள் கழித்து இரங்கல் தெரிவித்துள்ளது. முன்னதாக, கமேனி கொல்லப்பட்டதை உலக நாடுகள் வன்மையாக கண்டிக்க வேண்டும் எனவும், ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், மௌனம் கலைத்த இந்தியா, இந்த இக்கட்டான நேரத்தில் ஈரான் மக்களுடன் துணை நிற்பதாக தெரிவித்துள்ளது.


